செய்திகள்

டாக்டர். எஸ். சௌந்தரபாண்டியன் காலமானார்

சென்னை, மே 8– புகழ்பெற்ற எலும்பியல் நிபுணரும், அண்ணா நகரில் உள்ள சௌந்தரபாண்டியன் எலும்பு மற்றும் மூட்டு மருத்துவமனையின் நிறுவனருமான டாக்டர். எஸ். சௌந்தரபாண்டியன் நேற்று (7ந் தேதி) சென்னையில் காலமானார். அவருக்கு வயது 94. 1931 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் தேதி தூத்துக்குடியில் பிறந்தவர் டாக்டர். சௌந்தரபாண்டியன். ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் தனது எம்பிபிஎஸ் பட்டத்தையும், மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் (எம்எம்சி) எம்எஸ் பொது அறுவைசிகிச்சை மற்றும் எம்எஸ் எலும்பியல் பட்டங்களையும் பெற்றார். […]

Loading