செய்திகள்

இந்திய தடகள அணியின் திறன் இயக்குநர் ராஜினாமா

டெல்லி, நவ. 23- இந்திய தடகள அணியின் செயல்பாட்டு திறன் இயக்குநர் திடீர் என ராஜினாமா செய்துள்ளார். ஜெர்மனியைச் சேர்ந்த வோல்கர் ஹெர்மான் கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் இந்திய தடகள அணியின் உயர்செயல்பாட்டு திறன் இயக்குனராக செயல்பட்டு வந்தார். 2021-ம் ஆண்டு வரை இருந்த அவரது பதவி காலத்தை 2024-ம் ஆண்டு பாரீஸ் ஒலிம்பிக் வரை நீட்டித்தது மத்திய விளையாட்டு அமைச்சகம் . இந்த நிலையில் அவசரமாக நாடு திரும்பிய ஹெர்மான் திடீரென தனது […]

செய்திகள்

டேட்டிங் தளத்தில் கிடைத்த நண்பரை கொன்று உணவு சமைத்த ஆசிரியர்

பெர்லின், நவ. 21- ஜெர்மனியில் டேட்டிங் தளம் ஒன்றில் அறிமுகமான நபரை படுகொலை செய்து, உணவாக சமைத்த கல்லூரி ஆசிரியரை போலீசார் கைது செய்துள்ளனர். ஜெர்மனியின் பெர்லின் நகரில் உள்ள பூங்கா ஒன்றில் மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், மோப்ப நாயின் உதவியுடன் காவல்துறையினர் குற்றவாளியை கைது செய்துள்ளனர். இதில் கல்லூரி ஆசிரியரான ஸ்டீபன் என்பவரை காவல்துறையினர் இந்த கொலை தொடர்பாக கைது செய்துள்ளனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் வெளியிட்ட தகவலில், “ஆசிரியரான […]

செய்திகள்

காற்று மாசால் பாதிக்கப்பட்டவர்கள் இந்தியாவில் 17% கொரோனாவுக்கு பலி

பெர்லின், அக். 29- காற்று மாசு காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் கொரோனா தொற்றால் அதிக அளவில் உயிரிழக்கின்றார்கள் என புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஜெர்மனியின் மேக்ஸ் பிளாங்க் இன்ஸ்டிடியூட் ஃபார் கெமிஸ்ட்ரி உள்ளிட்ட ஆராய்ச்சியாளர்கள், ஐரோப்பாவில் காற்று மாசுபாட்டுடன் தொடர்புடைய கொரோனா உயிரிழப்புகளின் விகிதம் சுமார் 19% ஆகவும், வட அமெரிக்காவில் இது 18% ஆகவும், கிழக்கு ஆசியாவில் 27% ஆகவும் இருப்பதைக் கண்டறிந்தனர். கார்டியோவாஸ்குலர் ரிசர்ச் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வு கட்டுரையில், கொரோனா […]

வாழ்வியல்

ஜெர்மனி உதவியுடன் இந்தியாவுக்கு அறிவியல் ஆய்வுக்கு விசைப்பொறி வசதி

அடிப்படை அறிவியல் ஆய்வுக்குத் தேவையான மிகப்பெரிய விசைப்பொறி வசதி யானது ஜெர்மனியில் அக்டோபர் 2010ல் டார்ஸ்டட் என்ற இடத்தில் உள்ள ஆண்ட்டி புரோட்டான் மற்றும் ஐயனிகள் ஆராய்ச்சி மையத்தில் (எஃப்.ஏ.ஐ.ஆர் ஜி.எம்.பி.ஹெச்) நிறுவப்பட்டுள்ளது. இதன் நிறுவன உறுப்பினராக இந்தியா உள்ளது. இது ஒரு சர்வதேச மையமாகும். பல்வேறு உயிரினங்களில் இருந்து அதிக அடர்த்தி கொண்ட ஆன்ட்டி புரோட்டான் மற்றும் அயனி கற்றைகளை இந்த மையம் பயன் படுத்தும். இது அணு, அணுக்கரு, துகள் மற்றும் பிளாஸ்மா இயற்பியல் […]

செய்திகள்

ரஷ்ய எதிர்க்கட்சி தலைவருக்கு விஷம்: பதிலளிக்க நெருக்கடி கொடுக்கும் ஜெர்மனி

பெர்லின், செப். 7- ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னி விவகாரம் தொடர்பான விசாரணைக்கு ரஷ்யா ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என ஜெர்மனி கூறியுள்ளது. ரஷ்யாவில் அதிபர் புதின் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. அவரின் ஆட்சிக்கு எதிராக, ரஷ்யாவின் முக்கிய எதிர்க்கட்சியான ‘ எதிர்கால ரஷ்யா’ கட்சியின் தலைவர் அலெக்ஸி நவல்னி தீவிரமாக போராடிக் கொண்டிருக்கிறார். அதனால் அவர் பலமுறை சிறைக்குச் சென்று வந்துள்ளார். இதற்கு முன்னதாக அரசு ஆதரவாளர்கள் அவரை கிருமிநாசினி மூலமாக கடந்த 2011 […]

செய்திகள்

ரஷ்ய எதிர்க்கட்சி தலைவருக்கு விஷம் வைத்ததாக குற்றச்சாட்டு: அதிபர் புதினுடன் ஜெர்மனி மோதல்

பெர்லின், செப். 3- நரம்பு மண்டலத்தை தாக்கும் கொடிய விஷம், ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸ் நவ்லனிக்கு கொடுக்கப்பட்டது என, சிகிச்சை அளித்த ஜெர்மன் மருத்துவமனை தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை எதிர்த்து நிற்பவர் எதிர்கட்சி தலைவராக இருக்கும் அலெக்ஸ் நவல்னி. சமீபகாலமாக அலெக்ஸ் நவல்னி அதிபர் விளாடிமிர் புதின் ஆட்சியை கடுமையாக விமர்சித்து வருகிறார். அலெக்ஸ் நவல்னி கடந்த ஆகஸ்ட் 20 ந்தேதி ஒம்சக் நகரிலிருந்து விமானம் மூலம் மாஸ்கோ சென்றார். […]