செய்திகள்

30 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள்: எடப்பாடி வழங்கினார்

ஸ்கூட்டர், தையல் மெஷின், சைக்கிள், தள்ளுவண்டி 30 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள்: எடப்பாடி வழங்கினார் முதல்வருக்கு மாவட்ட செயலாளர் ராஜேஷ் தலைமையில் உற்சாக வரவேற்பு சென்னை பிப்.25– – முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 73 வது பிறந்த நாளை யொட்டி வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட அண்ணா தி.மு.க. சார்பில் ஆர்.கே.நகர் பகுதி கொருக்குப்பேட்டை எழில் நகர் பகுதியில் மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் 30 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட கழக […]

செய்திகள்

ஸ்டாலின் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அண்ணா தி.மு.க.வை வீழ்த்த முடியாது

மாவட்ட செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ் ஏற்பாட்டில் கொருக்குப்பேட்டையில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் ஸ்டாலின் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அண்ணா தி.மு.க.வை வீழ்த்த முடியாது எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை என்றைக்கும் கொள்கையைவிட்டு கொடுக்க மாட்டோம்: சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பாக இருப்போம் சென்னை, பிப்.25– ஸ்டாலின் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அண்ணா தி.மு.க.வை வீழ்த்த முடியாது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்டம் சார்பில் கொருக்குப்பேட்டை எழில் […]

செய்திகள்

திருமங்கலம் அம்மா கோவிலில் 501 பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு

ஜெயலலிதா 73 வது பிறந்தநாளை முன்னிட்டு கழக அம்மா பேரவை சார்பில் திருமங்கலம் அம்மா கோவிலில் 501 பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார் அமைச்சர்ஆர் பி உதயகுமார் மதுரை, பிப்.25- புரட்சித்தலைவி அம்மாவின் 73 வது பிறந்தநாளை முன்னிட்டு திருமங்கலம் அம்மா கோவிலில்கழக அம்மா பேரவையின் சார்பில் அமைச்சர்ஆர் பி உதயகுமார் ஏற்பாட்டில் 501 பெண்கள் புதிய பானையில் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு செய்து பொது மக்களுக்கு நலத்திட்ட […]

செய்திகள்

முத்தியால்பேட்டையில் 10,073 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள்: வி.சோமசுந்தரம் வழங்கினார்

ஜெயலலிதா 73-வது பிறந்தநாள் விழா முத்தியால்பேட்டையில் 10,073 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள்: வி.சோமசுந்தரம் வழங்கினார் மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் ஆர்.வி.ரஞ்சித்குமார் ஏற்பாடு காஞ்சீபுரம், பிப்.24-– முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளையொட்டி காஞ்சீபுரம் அருகே முத்தியால்பேட்டையில் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளரும், ஆன்மீக பிரமுகருமான ஆர்.வி.ரஞ்சித்குமார் ஏற்பாட்டின் பேரில் பிரம்மாண்டமான மேடை அமைக்கப்பட்டு, அம்மாவின் படம் வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இதில் மாவட்ட செயலாளர் வி.சோமசுந்தரம் கலந்து […]

செய்திகள்

தமிழகம் முழுவதும் நலத்திட்ட உதவிகள், அன்னதானம் வழங்கி கொண்டாட்டம்

சென்னை, பிப். 24 மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 73வது ஆண்டு பிறந்த நாள் விழாவையொட்டி தமிழகம் முழுவதும் அண்ணா தி.மு.க.வினர் நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கி கொண்டாடினர். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு, அண்ணா தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீரசெல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘அம்மாவின் பிறந்த நாளை முன்னிட்டு ஏழை, எளியோருக்கு அன்னதானம் வழங்குதல்; இலவச திருமணங்களை நடத்தி வைத்தல்; […]

செய்திகள்

ஜெயலலிதா சிலைக்கு எடப்பாடி, ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை

73வது பிறந்தநாள்: காமராஜர் சாலையில் ஜெயலலிதா சிலைக்கு எடப்பாடி, ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை எம்.பி., எம்.எல்.ஏ.க்களும் பங்கேற்றார்கள் 73 லட்சம் மரக்கன்று நடும் விழா: முதல்வர் துவக்கினார் * திருவள்ளூர் நர்மதாவுக்கு பெண் குழந்தைகள் முன்னேற்றத்துக்கான மாநில விருது * பெண் குழந்தைகள் பிறப்பு பாலின விகிதம் உயர்வு: நாமக்கல், தர்மபுரி, திருவண்ணாமலை கலெக்டருக்கு விருது சென்னை, பிப்.24– புரட்சித் தலைவி ஜெயலலிதாவின் 73-வது பிறந்த நாளையொட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (24–ந்தேதி) […]

செய்திகள்

ஜெயலலிதா சிலைக்கு எடப்பாடி – ஓ.பி.எஸ். மாலை

73–வது பிறந்த நாள்: அண்ணா தி.மு.க. தலைமை கழகத்தில் ஜெயலலிதா சிலைக்கு எடப்பாடி – ஓ.பி.எஸ். மாலை 73 கிலோ கேக் வெட்டினார்கள் அன்னதானம், நலத்திட்ட உதவிகள், மருத்துவ முகாம் சென்னை, பிப்.24– தமிழகம் முழுவதும் இன்று ஜெயலலிதாவின் 73–வது பிறந்த நாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சென்னையில் உள்ள அண்ணா தி.மு.க. தலைமை கழகத்தில் நடந்த விழாவில் ஜெயலலிதா சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து வணங்கினார்கள். 73 […]

செய்திகள்

பெண்கள், அடித்தட்டு மக்களின் மேம்பாட்டிற்காக உழைத்தவர்: ஜெயலலிதாவுக்கு மோடி புகழாரம்

டெல்லி, பிப். 24– பெண்கள் மற்றும் அடித்தட்டு மக்களின் மேம்பாட்டிற்காக அயராது உழைத்தவர் ஜெயலலிதா என, டுவிட்டர் மூலம் பிரதமர் மோடி, பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்று ஜெயலலிதாவின் 73’வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை, பிரதமர் நரேந்திர மோடி, நினைவு கூர்ந்து டுவிட்டர் மூலம் நினைவு கூர்ந்துள்ளார். அதில் அவர் கூறி உள்ளதாவது;– “ஜெயலலிதாவின் பிறந்த நாளில் அவரை நினைவு கூர்கிறேன். அவர் மக்கள் சார்பு கொள்கைகளையும் நலிந்தவர்களை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் ஆகியவற்றால் […]

செய்திகள்

அனைவரும் ஒன்றிணைந்து மீண்டும் அதிமுக ஆட்சியமைக்க வேண்டும்

சென்னை, பிப். 24– ஜெயலலிதாவின் உடன்பிறப்புகள் அனைவரும் ஒன்றிணைந்து, மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்க வேண்டும் என்று சசிகலா தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து, சென்னை தியாகராய நகர் இல்லத்தில், ஜெயலலிதா படத்திற்கு மலர் தூவி மாலை அணிவித்து, சசிகலா மரியாதை செலுத்தினார். மேலும் டிடிவி தினகரன் மற்றும் அமமுக தொண்டர்கள் அனைவருக்கும் சசிகலா இனிப்புகளை வழங்கினார். பின்னர் பேசிய சசிகலா, அனைவரும் ஒன்றிணைந்து, தமிழக […]

செய்திகள்

அரசியல் சவால்களை சந்திப்பதில் ஜெயலலிதா இரும்பு போன்றவர்

புதுச்சேரி, பிப். 24– மக்கள் பணியில் ஜெயலலிதா கரும்பாக இருந்தவர் என்று தமிழிசை சவுந்திரராஜன் டுவிட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் 73 வது பிறந்தநாள், இன்று தமிழகம் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு இடங்களில் கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி, தெலங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:– மரியாதைக்குரிய ஜெயலலிதா அவர்களின் பிறந்த தினம் இன்று. ஜெயலலிதா அவர்கள், ‘மக்கள் […]