தமிழ் சினிமாவின் ஜென்டில்மேன் ஆக்டர் என அழைக்கப்படும் ஜெமினி கணேசனுக்கு இந்தாண்டு 100வது பிறந்த நாள். அவருடன் இணைந்து நடித்த நடிகைகள் தங்களது அனுபவம் குறித்து நம்முடன் பகிர்ந்துகொண்டனர். ஜெமினிக்கு ஜோடியாக நடிச்சோம் நிழலில். ஆனால் ‘‘ அண்ணனாகத் தான் மதித்தோம் நிஜத்தில்…’’என்று சினிமாவின் பொற்கால நாயகிகள் கே.ஆர்.விஜயா, விஜயகுமாரி, காஞ்சனா, சச்சு ஆகியோர் நெகிழ்ச்சியோடு கூறினார்கள். “வஞ்சிக்கோட்டை வாலிபன்” படத்தில் ஜெமினிக்கு தங்கையாக நடித்தேன். இதே படம் இந்தியில் எடுக்கப்பட்டது. அதில் நடிக்க வாசன் கேட்டார். எனக்கு இந்தி […]