சிறுகதை

எதிர் வினை – ஜூனியர் தேஜ்

திருமணலூர். இயற்கை எழில் கொஞ்சும் கிராமம். “நாங்க ஆஸ்பத்திக்குப் போய் வரோம்!” என்று தாய் தந்தையரிடமும் குழந்தைகளிடமும் சொல்லிக் கொண்டு புறப்பட்டனர் கார்டியாலஜிஸ்ட் டாக்டர் இருள் – அவர் மனைவியும் ஃபார்மஸிஸ்டுமான சந்திரமதி இருவரும். *** பேரன் பேத்திகளுக்கு பாட்டி கேப்பைக் கூழ் ஊட்டிவிட, எதிரில் அமர்ந்து வில்லி பாரதம் கதை சொல்லிக் கொண்டிருந்தார் தாத்தா அமாவாசை. அனைவரும் அவர்களுக்குக் கையசைத்தனர். வழக்கப்படி கிராமத்து அழகை ரசித்துகொண்டே வந்து இருளப்ப சாமியைக் கை கூப்பிக் கும்பிட்டு விட்டு […]

சிறுகதை

வேதம் புதுமை செய் –ஜூனியர் தேஜ்

கலப்பு மணக் காவலன், பெண்ணியப் பிதாமகன், எழுத்து சீர்திருத்தர் என்றெல்லாம் விளக்கப்படும், அச்சு ஊடகங்களின் முடிசூடா மன்னன், பல ‘லட்ச’க் கணக்கான வாசகர்களின் நல்லாதரவும் பற்பல மாநில விருதுகள், தேசிய விருதுகளுக்கெல்லாம் சொந்தக்காரருமான புரட்சி எழுத்தாளர் ‘புதியோன்’ பிரபல ‘டி.வி சேனலின்’ நேர்காணலுக்குத் தயாராகிக் கொண்டிருந்தார். ‘கேமரா’ முன் நடித்துப் பழக்கமில்லாத அவர் நிலைக் கண்ணாடி முன் மிடுக்காய் நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் அமர்ந்தும் ‘சேனல்’ன் கேள்விகளுக்காகத் தயார் செய்த புரட்சிகரமான பூடகமான விடைகளைப் பேசி…, […]

சிறுகதை

சோளப் பூ – ஜூனியர் தேஜ்

‘பாப்கான் வாலா’ . மூன்று மாதங்களாகத்தான் அவன் பாப்கான்வாலா. இந்தத் தொழிலை வேறு யாரும் செய்யாததால் போட்டிக்கு ஆளில்லாத தனிக்காட்டு ராஜாவாக உலா வந்தான் . அப்பாவின் அகால மரணத்துக்குப் பின், ‘பி.காம்’ மோடு படிப்பை முடித்துக்கொண்டு சென்னையில் தாய்மாமன் டிக்கெட் கிழிக்கும் சினிமா தியேட்டரில் ‘பாப்கார்ன் ஸ்டால்’ கான்ட்ராக்டரிடம் வேலை பார்த்தான். முதலாளி டிஎன்பிஎஸ்சி எழுதி அரசு வேலை கிடைத்துச் சென்றுவிட்டபிறகு இவனே தனியாக பாப்கான் பொரித்து விற்று முதலாளிக்கு வாரம் தோறும் வாடகை தந்தான். […]