செய்திகள்

ஆரூத்ரா கோல்டு நிறுவன இயக்குநர் ரூசோ ஜாமீன் மனு தள்ளுபடி

சென்னை, ஜூலை 10– ஆரூத்ரா கோல்டு நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவரான ரூசோவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சென்னை அமைந்தகரையை தலைமையிடமாகக் கொண்டு திருவள்ளூர், திருவண்ணாமலை, ஆரணி, செய்யாறு, கோயம்புத்தூர் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆருத்ரா கோல்டு டிரேடிங் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனம், தங்களிடம் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால், மாதம் ரூ.36 ஆயிரம் வட்டியாக வழங்கப்படும் என விளம்பரம் செய்தது. இதனிடையே, இந்த […]

Loading

செய்திகள்

செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு ஒத்திவைப்பு

புதுடெல்லி, ஜூலை 10– ஜாமீன் வழங்கக் கோரிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஜூலை 12-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது. அண்ணா தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது பண மோசடியில் ஈடுபட்ட பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து ஓராண்டு ஆகியும் ஜாமீன் வழங்காதது குறித்து, செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் முகுல் இந்த […]

Loading

செய்திகள்

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன்: முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு

சென்னை, ஜூன் 29– ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரனுக்கு கோர்ட் ஜாமீன் வழங்கியிருப்பதை முதல்வர் ஸ்டாலின் வரவேற்றுள்ளார். இதுகுறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில் கூறியிருப்பதாவது:– ஹேமந்த் சோரன் அவர்களே வருக! சரியாக 2024 நாடாளுமன்றப் பொதுத்தேர்தலுக்கு முன்பாக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டது என்பது எதிர்ப்புக் குரலை நசுக்குவதற்காக பா.ஜ.க. அரசு அரங்கேற்றிய அப்பட்டமான அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை ஆகும். பழங்குடியினத்தைச் சேர்ந்த […]

Loading

செய்திகள்

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு

டெல்லி, ஜூன் 21– டெல்லி முதலைமைச்சரான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நேற்று ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில், தற்காலிகமாக வழங்கப்பட்ட ஜாமீனை நிறுத்தி வைத்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த ஆண்டின் கடந்த மார்ச்-21 ம் தேதி மதுபான கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லியின் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், டெல்லி சிறப்பு நீதிமன்றம் நேற்று அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது . இன்றைய நாளில் அரவிந்த் […]

Loading

செய்திகள்

கார் ஓட்டி 2 பேர் உயிரை பறித்த 17 வயது சிறுவனுக்கு கட்டுரை எழுதும் தண்டனை

புனே நீதிமன்றம் மீது விமர்சனம் புனே, மே 21– புனேவில் 17 வயது மைனர் சிறுவன் கார் ஓட்டி விபத்து ஏற்பட்டதில் இருவர் உயிரிழந்த நிலையில், அச்சிறுவனுக்கு வெறும் 15 மணி நேரத்தில் ஜாமீன் வழங்கியுள்ள சம்பவம் பெரும் விமர்சனங்களை பெற்று வருகிறது. மகாராஷ்டிரா மாநிலம், புனேவில், கல்யாண் நகர் பகுதியில் 19 ஆம் தேதி அதிகாலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இப்பகுதியில், 12 ஆம் வகுப்பு படிக்கும் சிறுவன், மதுபோதையில் அதிவேகமாக Porsche என்ற காரை […]

Loading

செய்திகள்

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான விசாரணை நாளை ஒத்திவைப்பு

டெல்லி, மே 15– பண மோசடி வழக்கில் ஜாமீன் கோரிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனு மீதான விசாரணை நாளை ஒத்திவைக்கப்பட்டது. தமிழகத்தில் அண்ணா திமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்த போது வேலை வழங்க லஞ்சம் வாங்கியதாக கூறப்பட்ட விவகாரத்தில் சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை நடந்ததாக அமலாக்கத்துறை வழக்குத் தொடர்ந்தது. அதில், கடந்தாண்டு ஜூன் 14-ஆம் தேதி அவா் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் 3,000 பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிகையை […]

Loading

செய்திகள்

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: கவிதாவுக்கு ஜாமீன் மறுப்பு

டெல்லி, மே 6– டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் எம்.எல்.ஏ. கவிதாவுக்கு ஜாமீன் வழங்க கோர்ட் மறுப்பு தெரிவித்தது. அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு கடந்த 2021–ம் ஆண்டு டெல்லி மாநிலத்திற்கு புதிய மதுபான கொள்கை கொண்டுவந்தது. தனியார் மதுபான நிறுவனங்களுக்கு ஆதரவாக மதுபான கொள்கைகள் கொண்டுவரப்பட்டதாகவும், தனியார் நிறுவனங்கள் டெல்லியில் மதுபான கடைகள் அமைக்க, உரிமம் வழங்க ஆம் ஆத்மி கட்சி முக்கிய தலைவர்களுக்கு லஞ்சம் வழங்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதிலும் குறிப்பாக […]

Loading

செய்திகள்

விசாரணையை தாமதப்படுத்த அமலாக்கத்துறை முயற்சி

உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு டெல்லி, ஏப். 29– வழக்கு விசாரணையை அமலாக்கத்துறை தாமதப்படுத்த முயற்சிப்பதாக செந்தில் பாலாஜி தரப்பு உச்சநீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டியுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமலாக்கத்துறை கைது செய்தது. 35 முறை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்ட நிலையில், செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள் நிராகரிக்கப்பட்டதை அடுத்து, உச்சநீதிமன்றத்தில் மீண்டும் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார். […]

Loading