செய்திகள்

ஜப்பான் பிரதமருக்கு மோடி வாழ்த்து

புதுடெல்லி, செப்.16 ஜப்பான் நாட்டின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள யோஷிஹைட் சுகாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இதுசம்பந்தமாக பிரதமர் மோடி தன் டுவிட்டர் பதிவில், “ஜப்பானின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள யோஷிஹைட் சுகாவுக்கு உளமார்ந்த வாழ்த்துகள். நமது சிறப்பான உத்திபூர்வ மற்றும் உலகளாவிய கூட்டிணைவை, நாம் இருவரும் சேர்ந்து புதிய உயரங்களுக்கு கொண்டு செல்லும் வாய்ப்பை எதிர்நோக்குகிறேன்” என்று கூறியுள்ளார்.