தலையங்கம் இந்தியாவுக்கு மிக முக்கியமான அண்டை நாடாக உள்ள வங்காளதேசத்தில் சமீபத்தில் நடந்த அரசியல் மாற்றங்கள் பல்வேறு பரிமாணங்களில் பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, தப்பி ஓடிவிட்ட பிரதமர் ஷேக் ஹசீனாவை கவிழ்க்க நடந்த நிகழ்வு வங்காளதேசத்தில் மட்டுமல்லாது, இந்தியாவிலும் வரும் நாட்களில் பெரும் சிக்கல்களை உருவாக்கப் போவதற்கான அறிகுறிகள் தெரிகிறது. வங்காளதேசத்தின் அரசியல் வரலாறு மிகவும் குழப்பமானதாக இருந்து வந்துள்ளது. 1975 ஆம் ஆண்டு, ஷேக் ஹசீனாவின் தந்தையும் வங்காள தேசத்தின் தந்தையென மதிக்கப்படும் ஷேக் முஜிபுர் […]