சேலம், செப். 18– பழைய நாணயத்தைத் தந்தால் அதிக பணம் தருவதாக மோசடியில் ஈடுபட்ட 5 பேர் சேலத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே உள்ள மண் நாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் பழனிசாமி. மூட்டை தூக்கும் தொழிலாளியான இவருக்கு, முகநூலில் கடந்த சில நாள்களுக்கு முன்பு ஒரு விளம்பரம் வந்துள்ளது. அதில், பழங்கால நாணயங்களை வைத்திருப்போர் தொடர்பு கொண்டால் லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது. இதனைப் பார்த்த பழனிசாமி அந்த விளம்பரத்தில் இருந்த செல்போன் எண்ணைத் […]