செய்திகள்

மின்சார ரெயில்களில் இனி பொதுமக்களுக்கு அனுமதி இல்லை

சென்னை, மே.6- சென்னையில் மின்சார ரெயிலில் இன்று முதல் பொதுமக்கள் பயணிக்க அனுமதி இல்லை என்றும், அத்தியாவசிய ஊழியர்கள் பயணம் செய்யலாம் எனவும் தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த இன்று (வியாழக்கிழமை) முதல் அடுத்த 14 நாட்களுக்கு சென்னை புறநகர் மின்சார ரெயிலில் ரெயில்வே பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள், சட்டம் ஒழுங்கு, தூய்மை பணியாளர்கள், மாநகராட்சி மற்றும் நகராட்சி பணியாளர்கள் உள்பட தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட அத்தியாவசிய பணியாளர்களுக்கு மட்டுமே டிக்கெட் […]

செய்திகள்

சென்னை வந்தடைந்தது 75,000 கோவாக்சின் தடுப்பூசிகள்

சென்னை, மே 4– ஐதராபாத்திலிருந்து 75,000 கோவாக்சின் கொரோனா தடுப்பூசிகள் இன்று சென்னை வந்தடைந்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது. தொற்றைக் கட்டுப்படுத்த, பாரத் பயோடெக் நிறுவனத்தின் ‘கோவாக்சின்’ மற்றும் சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசிகள் பொது மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. தற்போது கொரோனா வேகமாக பரவி வருவதால் தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இந்நிலையில், ஐதராபாத்திலிருந்து 75 ஆயிரம் கோவாக்சின் கொரோனா தடுப்பூசி இன்று சென்னை வந்தடைந்துள்ளது. […]

செய்திகள்

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு

சென்னை, மே 4– சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயா்ந்து, ரூ.35,616-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி, வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. இதன்பிறகு, விலை படிப்படியாகக் குறைந்து, ரூ.34 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது. குறிப்பாக, கடந்த மாா்ச் 31-இல் ரூ.33,296 ஆக இருந்தது. இதையடுத்து, ஏப்ரல் 6 முதல் மீண்டும் தங்கம் விலை உயர்ந்தது. குறிப்பாக, ஏப்ரல் 9-இல்ஆபரணத் தங்கத்தின் […]

செய்திகள்

நாடெங்கும் தொற்று அதிகமுள்ள 150 மாவட்டங்களில் ஊரடங்கா?

டெல்லி, ஏப். 29– நாடு முழுவதும் கொரோனா தீவிரமாக இருக்கும் 150 மாவட்டங்களில், மீண்டும் முழு ஊரடங்கைக் கொண்டு வரலாம் என்று சுகாதாரத்துறை அமைச்சகம் ஆலோசனை தெரிவித்துள்ளது. கொரோனா இரண்டாம் அலை பரவல் உலகின் மற்ற நாடுகளை விட இந்தியாவில் வெகு வேகமாகப் பரவி உச்சத்தைத் தொட்டு வருகிறது. இந்நிலையில், புது டெல்லியில் நடைபெற்ற உயர்மட்ட அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டத்தில், “நாடு முழுவதும் கொரோனா தீவிரமாக இருக்கும் 150 மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கைக் கொண்டு வரலாம் […]

செய்திகள்

ஒரே நாளில் சென்னையில் 30 விமானங்கள் ரத்து

சென்னை, ஏப். 23– கொரோனா கட்டுப்பாடு காரணமாக, நேற்று ஒரே நாளில், சென்னையில் 30 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலையின் தீவிரத்தால் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, விமான பயணிகள் தங்களது பயணங்களை தவிர்த்து வருவதால் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து குறைந்த பயணிகளுடன் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் போதிய பயணிகள் இல்லாததால், நேற்றைக்கு மட்டும் 30 விமானங்கள் ரத்து […]

செய்திகள் வர்த்தகம்

சென்னையில் தங்கம் விலை இன்றும் சவரனுக்கு ரூ.208 உயர்வு

சென்னை, ஏப். 22– தங்கம் விலை இன்றும் சவரனுக்கு ரூ. 208 உயர்ந்து, ரூ.36,296 க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கடந்த சில மாதமாக ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. ஒரு நாள் விலை அதிகரித்தால், மறுநாள் விலை குறைவதுமான நிலையும் இருந்து வந்தது. இந்த நிலையில் தங்கம் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.472 உயர்ந்தது. இதைத் தொடர்ந்து இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.208 உயர்ந்துள்ளது. தங்கம் விலை இன்றும் ஒரே […]

செய்திகள்

கர்ப்பிணியை கீழே தள்ளிவிட்டு செயின் பறிக்க முயற்சி: 5 பேர் கைது

சென்னை, ஏப். 16– சென்னை அருகே, 8 மாத கர்ப்பிணி பெண்ணை கீழே தள்ளி செயினை பறிக்க முயன்ற சம்பவம் தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பல்லாவரத்தில் உள்ள ரேணுகா நகரைச் சேர்ந்த கீதா என்னும் 8 மாத கர்ப்பிணி பெண், 2 நாளுக்கு முன், வீட்டு வாசலில் உள்ள பிள்ளையார் கோவிலில் சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது, இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த 3 மர்ம நபர்களில், ஒருவன் மட்டும் இறங்கி கீதாவை […]

செய்திகள்

தங்கம் சவரனுக்கு இன்று ரூ.120 குறைவு

சென்னை, ஏப். 15– கொரோனா ஊரடங்கிற்கு பிறகு ஏற்ற இறக்கங்களுடன் விற்பனையாகி வந்த ஆபரண தங்கம் இன்று சவரனுக்கு ரூ.120 விலை குறைந்துள்ளது. கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் தங்கத்தின் விலையும் அதிகரித்தது. இதனைத்தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது. இதன் மூலம் ஆபரண தங்கம் […]

செய்திகள்

கொரோனா எதிரொலி: வெறிச்சோடிய மெரினா கடற்கரை

சென்னை, ஏப்.11– கொரோனா பரவலால் மெரினா கடற்கரைக்கு விடுமுறை நாட்கள் மற்றும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் இன்று மெரினா கடற்கரை வெறிச்சோடிக் காணப்பட்டது. தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதையடுத்து அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. பொதுமக்கள் அதிகம் கூடுவதைத் தடுக்கும் வகையில் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி உள்ளது. அந்த வகையில் மெரினா கடற்கரை மற்றும் செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்ட கடற்கரைகளில் விடுமுறை நாட்கள் மற்றும் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் பொதுமக்கள் செல்லத் […]

செய்திகள்

சென்னையில் ஒரே அடுக்குமாடி குடியிருப்பில் 15 பேருக்கு கொரோனா

சென்னை, ஏப்.10– சென்னை சைதாப்பேட்டையில் ஒரே அடுக்குமாடி குடியிருப்பில் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேற்கு சைதாப்பேட்டை வி.ஜி.பி. சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், கடந்த மார்ச் மாதம் 29ந் தேதி ஒரு நபருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. சில நாள்களில், அதே அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள மற்றொரு வீட்டில் இருந்த நபர், தி.நகர் பகுதியில் துக்க வீட்டுக்குச் சென்று திரும்பினார். அவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதே போல், மற்றொரு வீட்டில் […]