சிகாகோ, செப்.13– 17 நாட்கள் அமெரிக்க பயணத்தை முடித்துவிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னை புறப்பட்டார். அவரின் வருகைக்கு நன்றி தெரிவித்து அமெரிக்க வாழ் தமிழர்கள், சிகாகோ விமான நிலையத்தில் பதாகை ஏந்தி வழியனுப்பி வைத்தனர். தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, அமெரிக்காவுக்கு கடந்த 27ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்றார். சான்பிரான்சிஸ்கோ, சிகாகோ ஆகிய நகரங்களில் தொழில் முதலீட்டாளர்களைச் சந்தித்து பேச்சுவார்த்தைகள் மேற்கொண்டார். இந்த பேச்சுவார்த்தை மூலம், 18 முன்னணி நிறுவனங்கள் தமிழகத்தில் […]