செய்திகள்

சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ ரெயில் நிலைய வரைபடம்: இணையதளத்தில் வெளியீடு

சென்னை, செப்.28– சென்னையில் 2ம் கட்டமாக அமைக்கப்படும் மெட்ரோ ரெயில் பாதைகளில் அமைய உள்ள 92 ரெயில் நிலையங்களுக்கான வரைபடங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன. சென்னையில் முதல் கட்டத்தில் 2 பாதைகள் அமைக்கப்பட்டு மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதையடுத்து வடசென்னை, மத்திய சென்னை மற்றும் தென்சென்னை பகுதிகளில் உள்ள இடங்களை இணைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதுவும் குறிப்பாக தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் அதிகம் உள்ள தென்சென்னை பகுதிகளுக்கு வடசென்னையின் புறநகர் பகுதிகளில் உள்ளவர்கள் எளிதாக […]

செய்திகள்

பொது இடங்களில் குப்பை கொட்டினால் ரூ.500 அபராதம்: சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

சென்னை, செப்.22– சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொது இடங்களில் குப்பை கொட்டினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:– சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களிலும் நாள்தோறும் சராசரியாக 5 ஆயிரத்து 200 டன் திடக்கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன. தூய்மை பணியாளர்களால் வீடுகள் தோறும் சென்று குப்பைகள் பெறப்படுகின்றன. மேலும், பொது இடங்களில் குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டு திடக்கழிவுகள் சேகரிப்படுகின்றன. இந்த திடக்கழிவுகளில் குறிப்பிட்ட […]

செய்திகள்

இதுவரை 4,138 மூத்த குடிமக்களுக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி:சென்னை மாநகராட்சி

சென்னை, செப்.15– சென்னை மாநகராட்சியின் சார்பில் 80 வயதிற்கு மேற்பட்ட 4,138 மூத்த குடிமக்களுக்கு அவர்களின் இல்லங்களுக்கு சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:– முதல்வரின் உத்தரவுப்படி 200 வார்டுகளிலும் தீவிர தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு 26.8.2021 அன்று நடைபெற்ற 400 தடுப்பூசி சிறப்பு முகாம்களின் மூலம் சுமார் 1.35 லட்சம் தடுப்பூசிகளும், 12.9.2021 அன்று நடைபெற்ற 1600 தடுப்பூசி சிறப்பு முகாம்களின் […]

செய்திகள்

பழைய மாமல்லபுரம் சாலையில் இன்றுமுதல் 4 சுங்கச்சாவடி மூடல்

சென்னை, ஆக. 30– ஓஎம்ஆர் எனப்படும் பழைய மாமல்லபுரம் சாலையில் இன்றுமுதல் 4 சுங்கச்சாவடிகளில் கட்டண வசூல் நிறுத்தப்பட்டு மூடப்பட்டதால்வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்துள்ளனர். தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிகமுள்ள சென்னையின் புறநகர் பகுதியான சோழிங்கநல்லூர் வரை, பல பகுதிகள் சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டன. பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளாக இருந்ததால் பெருங்குடி, பள்ளிக்கரணை, துரைப்பாக்கம், மேடவாக்கம் சாலை, சோழிங்க நல்லூர் கலைஞர் சாலை ஆகிய 4 இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டன. 4 சுங்கச்சாவடி மூடல் அவைகள் சென்னை மாநகராட்சியுடன் […]

செய்திகள்

சென்னையில் இன்று 400 சிறப்பு தடுப்பூசி முகாம்!

சென்னை, ஆக. 26- சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளில் இன்று (ஆகஸ்ட் 26) 400 கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மாற்றுத்திறனாளிகள், உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நபர்கள், கர்ப்பிணி தாய்மார்கள், பாலூட்டும் பெண்கள் மற்றும் காசநோய் பாதித்த நபர்களைப் பாதுகாக்கும் வகையில் மாநகராட்சியின் சார்பில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு […]

செய்திகள்

பொது இடங்களில் கட்டிட கழிவுகளை கொட்டினால் ரூ.5000 அபராதம்

சென்னை மாநகராட்சி உத்தரவு சென்னை, ஆக. 11– பொது இடங்களில் கட்டிட கழிவுகளை கொட்டுவோருக்கு ரூ.5000 அபராதம் விதிக்க சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. மேலும் சென்னையில் கட்டடக் கழிவுகளைக் கொட்டுவதெற்கென 15 தனி இடங்களை மாநகராட்சி ஒதுக்கியுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் உருவாகும் கட்டடம் மற்றும் இடிப்பாட்டுக் கழிவுகளை மறுபயன்பாட்டுக்காக மாற்றும் வகையில் கொடுங்கையூர், பெருங்குடி குப்பைக் கொட்டும் வளாகங்களில் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையங்களில் நாளொன்றுக்கு தலா 400 மெட்ரிக் டன் […]

செய்திகள்

கொரோனா தடுப்பூசி செலுத்தியதில் சென்னை மாநகராட்சி முதல் இடம்

அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் சென்னை, ஆக.9- பொதுமக்களுக்கு அதிக தடுப்பூசி செலுத்தியதில் சென்னை மாநகராட்சி முதல் இடத்தில் உள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை தெற்கு பகுதி தி.மு.க. சார்பில் கருணாநிதியின் நினைவு நாளையொட்டி முன்கள பணியாளர்கள் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர்கள் என 3 ஆயிரம் பேருக்கு அரிசி, காய்கறி, மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் மற்றும் போரூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ரூ.10 லட்சத்தில் மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி வளசரவாக்கத்தில் […]

செய்திகள்

ஓட்டல்களில் 50 சதவீதம் பேருக்கு மேல் சாப்பிட அனுமதித்தால் தொழில் உரிமம் ரத்து

சென்னை மாநகராட்சி எச்சரிக்கை சென்னை, ஆக. 1–உணவகங்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மேல் உணவருந்த அனுமதித்தால் அபராதம் விதிக்கப்பட்டு, தொழில் உரிமம் ரத்து செய்யப்படும் என பெருநகர சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. இதையடுத்து தமிழ்நாடு அரசு முழுவீச்சில் கொரோனா தடுப்பு பணிகளை துரிதப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. அந்த வகையில், சென்னையில் கொரோனா பரவலை தடுக்க, மாநகராட்சி நிர்வாகமும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. […]