செய்திகள்

கிரிக்கெட்டை மகிழ்ச்சியுடன் விளையாட வேண்டும்; இல்லாவிட்டால் வலி நிரம்பியதாக, கொடூரமாக மாறிவிடும்

‘‘கிரிக்கெட்டை மகிழ்ச்சியுடன் விளையாட வேண்டும்; இல்லாவிட்டால் வலி நிரம்பியதாக, கொடூரமாக மாறிவிடும்’’ சென்னை அணி கேப்டன் எம்.எஸ். தோனி உருக்கம் துபாய், அக். 26– ‘கிரிக்கெட்டை மகிழ்ச்சியுடன் விளையாட வேண்டும், இல்லாவிட்டால் கிரிக்பெட் வலி நிரம்பியதாக, கொடூரமாக மாறிவிடும் என்று சென்னை அணியின் கேப்டன் எம்.எஸ். தோனி உருக்கமாக கூறினார். 13வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங் அணி 12 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் வெற்றியும், 8 போட்டிகளில் தோல்வியும் அடைந்து […]

செய்திகள்

பெங்களூர் அணியை வீழ்த்தி சென்னை ஆறுதல் வெற்றி

துபாய், அக். 26– பெங்களூர் அணியை வீழ்த்தி சென்னை அணி ஆறுதல் வெற்றி பெற்றது. 13வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டியின் 44வது லீக் போட்டி துபாயில் நேற்று நடைபெற்றது. இதில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர் பெங்களூர் அணியும், எம்.எஸ். தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஆரோன் பின்ச் 15 ரன்களிலும், […]

செய்திகள்

சென்னை அணியை எளிதில் வென்ற மும்பை

சார்ஜா, அக். 24– ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் சென்னை அணியை எளிதில் வென்றது மும்பை அணி. 13வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டியின் 41வது லீக் ஆட்டம் நேற்றிரவு சார்ஜாவில் நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணியும் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் பொலார்ட் பீல்டிங்கைத் தேர்வு செய்தார். இதைத் தொடர்ந்து சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கெய்க்வாட், டூப்பிளசிஸ் களமிறங்கினர். போல்ட் […]

செய்திகள்

வெற்றிக்கு போராடுமா சென்னை? மும்பை அணியுடன் இன்று மோதல்

13வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டியின் 41-வது லீக் ஆட்டம் இன்று சார்ஜாவில் நடைபெறுகிறது. இதில் எம்.எஸ். தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இதுவரை 10 ஆட்டங்களில் விளையாடியுள்ள சென்னை அணி 7-ல் தோல்வியும், 3-ல் வெற்றியும் கண்டு புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. ஐ.பி.எல். வரலாற்றில் சென்னை அணியின் மோசமான விளையாட்டாக இந்த ஆண்டு அமைந்துள்ளது. பிளே-ஆப் சுற்றும் முன்னேறும் வாய்ப்பை […]

செய்திகள்

சென்னை அணிக்கு மேலும் ஒரு பின்னடைவு: காயம் காரணமாக பிராவோ விலகல்

சென்னை, அக். 22– சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக அந்த அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. இது அந்த அணிக்கு மேலும் ஒரு பின்னடைவை ஏற்படுத்தும். 13வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் சென்னை அணியின் நட்சத்திர ஆட்டக்காரராகவும், ஆல்ரவுண்டராகவும் இருப்பவர் டுவைன் பிராவோ. கடைசியாக டெல்லி அணியுடன் நடந்த போட்டியில் கடைசி ஓவரில் பந்து வீச வேண்டிய பிரோவா […]

செய்திகள்

சென்னை அணியின் மோசமான ஆட்டம்: ராஜஸ்தான் எளிதில் வெற்றி

அபுதாபி, அக். 20– சென்னை அணியின் மோசமான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி எளிதில் வெற்றி பெற்றது.13வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 37வது லீக் ஆட்டம் நேற்றிரவு அபுதாபியில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி பேட்டிங்கைத் தேர்வு செய்தார். தொடக்க ஆட்டக்காரர்களாக சாம் கர்ரன் மற்றும் டூ பிளஸ்சிஸ் ஆகியோர் களமிறங்கினர். டூ பிளஸ்சிஸ் 10 ரன்களில் அவுட்டானார். […]

செய்திகள்

சென்னையை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் மீ்ண்டும் முதலிடம் பிடித்தது டெல்லி

சார்ஜா, அக். 18– ஐ.பி.எல். டி.20 கிரிக்கெட் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்திய டெல்லி கேபிட்டல்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடித்தது. 13வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டியின் 34வது லீக் ஆட்டம் சார்ஜாவில் நேற்றிரவு நடைபெற்றது. இதில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மோதின. ஏற்கனவே 8 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் வெற்றி பெற்று 5 […]

செய்திகள்

20 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியை வீழ்த்தி சென்னை 3வது வெற்றி

துபாய், அக். 14– ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டியில் 20 ரன் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3வது வெற்றியை பெற்றது. துபாயில் நேற்று நடைபெற்ற 13வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டியின் 29-வது லீக் ஆட்டத்தில் இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் மட்டும் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், 7 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் வெற்றி பெற்ற சன்ரைசர்சஸ் ஐதராபாத் அணியும் மோதின. […]

செய்திகள்

82 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி பெங்களூர் அபார வெற்றி

சார்ஜா, அக். 13– 82 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி பெங்களூர் அணி அபார வெற்றி பெற்றது. 13-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டியின் 28வது லீக் ஆட்டம் சார்ஜாவில் நேற்று இரவு நடந்தது. இதில் தினேஷ் கார்த்தி தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற பெங்களூர் அணியின் கேப்டன் விராட்கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி ஆரோன் பிஞ்ச், தேவ்தத் […]

செய்திகள்

சென்னை அணி மீண்டும் தோல்வி: பெங்களூர் 37 ரன் வித்தியாசத்தில் வெற்றி

துபாய், அக். 11– ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் பெங்களூர் அணி 37 ரன் வித்தியாசத்தில் வெற்றி வெற்றது. சென்னை அணி 5வது தோல்வியை தழுவியது. 13வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டியின் 25வது லீக் ஆட்டம் நேற்றிரவு துபாயில் நடைபெற்றது. இதில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின. ஏற்கனவே 6 போட்டிகளில் விளையாடிய சென்னை அணி 2 போட்டிகளில் […]