சென்னை, ஜூலை 23– குவைத்திலிருந்து பெல்டில் மறைத்து எடுத்துவரப்பட்ட ரூ. 1.3 கோடி மதிப்புள்ள தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் மீட்டனர். சென்னை சர்வதேச விமான நிலையத்தில் குவைத்தில் இருந்து வந்தடைந்த பயணியை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். சுங்கவரி செலுத்தும் எந்த பொருள்களை கொண்டுவராத நிலையில், பயணி வெளியே செல்ல முற்பட்ட போது, சந்தேகம் அடைந்த சுங்கத்துறை அதிகாரிகள் உடனே அந்த நபரை தடுத்து நிறுத்தினர். பின்னர் தனி அறைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்த போது […]