சென்னை, ஜன.31– சென்னை ஐ.சி.எப்–ல் உள்ள அம்பேத்கர் அரங்கத்தில் 69வது ரெயில்வே வார விழா தெற்கு ரயில்வே சார்பில் கொண்டாடப்பட்டது. இதில், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் 38 பிரிவுகளில் சிறப்பாகப் பணிபுரிந்த ரெயில்வே கோட்டங்கள் மற்றும் பணிமனைகளுக்கு விருதுகள் வழங்கினார். ரெயில்வே கோட்டங்களுக்கு இடையே சிறப்பாகப் பணிபுரிந்ததில் திருச்சி ரெயில்வே கோட்டம் முதலிடத்தையும், பாலக்காடு, திருவனந்தபுரம் ரயில்வே கோட்டங்கள் 2-–ம் இடத்தையும் பிடித்தன. தொடர்ந்து பொறியியல், வணிகம், சிக்னல் மற்றும் […]