செய்திகள்

‘‘தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி’’

சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு சென்னை, ஜன. 8– ‘‘தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளில் மட்டுமே ரசிகர்களை அனுமதிக்க வேண்டும்’’ என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் 50 சதவீத இருக்கைகளுடன், தியேட்டர்கள் இயங்க அனுமதித்து, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்தநிலையில் தியேட்டடர்களில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று சினிமா துறையை சேர்ந்தவர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர். […]

சினிமா செய்திகள்

மாஸ்டர் திரைப்படத்தை இணையதளங்களில் வெளியிட தடை: சென்னை ஐகோர்ட் உத்தரவு

பொங்கலுக்கு வெளியாகும் மாஸ்டர் திரைப்படத்தை இணையதளங்களில் வெளியிட தடை: சென்னை ஐகோர்ட் உத்தரவு சென்னை, ஜன. 8– பொங்கலுக்கு வெளியாகவுள்ள மாஸ்டர் திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களிலும், கேபிள் டிவிக்களிலும் வெளியிட சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தை சேவியர் பிரிட்டோ மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோவின் […]

செய்திகள்

நடிகை சித்ரா தற்கொலை வழக்கு: கைது செய்யப்பட்ட கணவர் ஜாமீன் கோரி மனு தாக்கல்

சென்னை, ஜன. 7– சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அவரது கணவர் ஹேம்நாத், ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி காவல் துறைக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சின்னத்திரை நடிகை சித்ரா, கடந்த டிசம்பர் 9-ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக, தற்கொலை என வழக்குப் பதிவு செய்த நசரத்பேட்டை காவல் ஆய்வாளர், பின், அவரது கணவர் மற்றும் உறவினர்களுடன் நடத்திய விசாரணைக்குப் பின், தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப்பதிவு […]

செய்திகள்

அரசியல் களத்தில் சந்திக்க வேண்டிய சண்டைகளை நீதிமன்றத்துக்கு ஏன் கொண்டு வருகிறீர்கள்?

சென்னை, ஜன.5- அரசியல் சண்டைகளை ஏன் நீதிமன்றத்திற்கு கொண்டு வருகிறீர்கள்? என்று தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. தொடர்ந்த வழக்கில் சென்னை ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. அப்பாவு சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- 1988ம் ஆண்டு இயற்றப்பட்ட ஊழல் தடுப்பு சட்டத்தில், 2018ம் ஆண்டு திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதில் பொது ஊழியர்களுக்கு எதிரான புகார்கள் மீது விசாரணை நடத்த தகுதியான அதிகாரிகளிடம் ஒப்புதல் பெற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதன்படி […]

செய்திகள்

சென்னை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக சஞ்சீப் பானர்ஜி பதவி ஏற்பு

சென்னை, ஜன. 4– சென்னை ஐகோர்ட்டின் 50வது தலைமை நீதிபதியாக சஞ்சீப் பானர்ஜி இன்று காலை பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு கவர்னர் பன்வாரிலால் புரோஹித் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமை நீதிபதிக்கு பொன்னாடை அணிவித்து மலர்கொத்து வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தனர். சென்னை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக இருந்த ஏ.பி.சாஹி கடந்த டிசம்பர் 31ம் தேதி ஓய்வுபெற்றார். இதனையடுத்து கொல்கத்தா ஐகோர்ட்டில் 2வது மூத்த நீதிபதியாக இருந்த சஞ்சீப் பானர்ஜியை […]

செய்திகள்

பொருட்கள் மாயம்: மன உளைச்சலால் பிரசாத் ஸ்டூடியோவுக்கு இளையராஜா வரவில்லை

சென்னை, டிச.28– பிரசாத் ஸ்டூடியோவில் தான் பொக்கிஷமாக பாதுகாத்து வந்த சில பொருட்கள் காணாமல் போயுள்ளதால் கடும் மன உளைச்சல் காரணமாக இசையமைப்பாளர் இளையராஜா இன்று வருகையை ரத்து செய்தார். சென்னை சாலிகிராமத்தில் அமைந்துள்ள பிரசாத் ஸ்டூடியோவில் ஓர் அரங்கை இசையமைப்பாளர் இளையராஜா 35 ஆண்டுகளுக்கு மேலாக ‘ரெக்கார்டிங் தியேட்டராக’ பயன்படுத்தி வந்தார். இந்தநிலையில் அந்த அரங்கை வேறு தேவைக்குப் பயன்படுத்த பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகம் முடிவு செய்தது. இதனையடுத்து பிரசாத் ஸ்டூடியோவில் தான் வைத்திருந்த பொருள்களையும், […]

செய்திகள்

பிரசாத் ஸ்டூடியோவுக்குள் நுழைய இளையராஜாவுக்கு அனுமதி

சென்னை, டிச. 23 சென்னை பிரசாத் ஸ்டூடியோ வுக்குள் நுழைய பிரபல இசையமைப்பாளர் இளைய ராஜாவுக்கு சென்னை ஐகோர்ட் இன்று அனுமதியளித்ததுள்ளது. இசையமைத்த அறையில் அமர்ந்து தியானம் செய்யலாம், காலை 9 மணியிலிருந்து மாலை 4 மணி வரை அங்கு இருக்கலாம் என்றும் உத்தரவிட்டுள்ளது. எந்தத் தேதி என்பது குறித்து இரு தரப்பும் பேச முடிவு செய்ய வேண்டும் என்று கோர்ட் அறிவுறுத்தியுள்ளது. இளையராஜாவுக்கு சொந்தமான பொருட்களை பட்டியலிட வழக்கறிஞர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பிராசாத் ஸ்டூடியோ விவகாரத்தில் […]

செய்திகள்

சென்னை ஐகோர்ட்டின் 50-வது தலைமை நீதிபதியாக சஞ்சீப் பானர்ஜி நியமனம்

சென்னை, டிச.17- தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி இம்மாதம் ஓய்வுபெற உள்ளதால், சென்னை ஐகோர்ட்டின் 50-வது தலைமை நீதிபதியாக கொல்கத்தா ஐகோர்ட் மூத்த நீதிபதி சஞ்சீப் பானர்ஜியை நியமிக்க சுப்ரீம் கோர்ட்டு முடிவு செய்துள்ளது சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக இருக்கும் ஏ.பி.சாஹி வருகிற 31-ந் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். இதையடுத்து சென்னை ஐகோர்ட்டின் 50-வது தலைமை நீதிபதியாக கொல்கத்தா ஐகோர்ட்டின் மூத்த நீதிபதி சஞ்சீப் பானர்ஜியை நியமிக்க சுப்ரீம் கோர்ட் முடிவு செய்துள்ளது. பல்வேறு மாநில ஐகோர்ட்டுகளுக்கு […]

செய்திகள்

சென்னை ஐகோர்ட்டிற்கு 10 கூடுதல் நீதிபதிகள் பதவி ஏற்பு

சென்னை, டிச.3– சென்னை ஐகோர்ட்டிற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 10 கூடுதல் நீதிபதிகளுக்கு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி பதவி பிரமாணம் செய்து வைத்தார். மாவட்ட நீதிபதிகள் அந்தஸ்தில் இருந்த ஜி.சந்திரசேகரன், ஏ.ஏ.நக்கீரன், வி.சிவஞானம், ஜி.இளங்கோவன், எஸ்.ஆனந்தி, எஸ்.சதிக்குமார், கே.முரளி சங்கர், ஆர்.என்.மஞ்சுளா, டி.வி.தமிழ்ச்செல்வி ஆகியோரை சென்னை ஐகோர்ட் கூடுதல் நீதிபதிகளாக நியமிக்க சமீபத்தில் ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார். அதன்படி ஐகோர்ட் கூட்ட அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 10 பேருக்கும் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி பதவிபிரமானம் செய்து வைத்தார். இந்த […]

செய்திகள்

4 பெண்கள் உட்பட சென்னை ஐகோர்ட்டுக்கு 10 புதிய நீதிபதிகள்: ஜனாதிபதி ஒப்புதல்

* எஸ்.டி.தமிழ்ச்செல்வி * எஸ்.ஆனந்தி * ஆர்.என்.மஞ்சுளா * எஸ்.கண்ணம்மாள் 4 பெண்கள் உட்பட சென்னை ஐகோர்ட்டுக்கு 10 புதிய நீதிபதிகள்: ஜனாதிபதி ஒப்புதல் முதல்முறையாக நீதித்துறை வரலாற்றில் ஐகோர்ட்டில் கணவன்–மனைவி நீதிபதி சென்னை, டிச.2- சென்னை ஐகோர்ட் நீதிபதியாக 10 மாவட்ட நீதிபதிகளை நியமனம் செய்ய ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். இவர்கள் விரைவில் பொறுப்பேற்க உள்ளனர். சென்னை ஐகோர்ட்டில் மொத்த நீதிபதிகள் பணியிடம் 75 ஆகும். தற்போது 53 நீதிபதிகள் மட்டுமே பணியில் உள்ளனர். 22 […]