செய்திகள்

மாயமான ஆவணங்கள் குறித்து 4 வாரங்களில் அறிக்கை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தாம்பரம், செப். 22– தாம்பரம் ஆர்டிஓ அலுவலகத்தில் மாயமான ஆவணங்கள் குறித்து, 4 வாரங்களில் அறிக்கை அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை, ஜமீன் பல்லாவரத்தில் குரோம் லெதர் கம்பெனிக்கு சொந்தமான 1.79 ஏக்கர் நிலம், குவெண்டி தாசன் என்ற பெயருக்கு பட்டா மாற்றம் செய்து 2019ஆம் ஆண்டு தாம்பரம் வருவாய் கோட்டாட்சியராக இருந்த ராஜகுமார் என்பவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவை எதிர்த்து குரோம் லெதர் கம்பெனி தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, […]

செய்திகள்

அரசு உத்தரவில் நீதிமன்றம் தலையிட முடியாது: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

சென்னை, செப். 8– விநாயகர் சதூர்த்தி விவகாரத்தில், அரசின் உத்தரவில் நீதிமன்றம் தலையிட முடியாது என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு தெரிவித்துள்து. சென்னையை சேர்ந்த இல.கணபதி என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். அதில் கடந்த 30-ஆம் தேதி, தமிழ்நாடு அரசு, பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபடுவதற்கும், ஊர்வலமாக எடுத்து செல்வதற்கும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளதை சுட்டிக்காட்டி அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும், பொது இடங்களில் விநாயகர் […]

செய்திகள்

அன்னைத் தமிழில் அர்ச்சனை திட்டத்துக்கு தடை இல்லை : சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

சென்னை, செப். 3– ‘அன்னை தமிழில் அர்ச்சனை’ திட்டத்துக்கு தடை விதிக்க முடியாது எனக் கூறி, சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது. திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்ற நிலையில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 47 முதுநிலை கோயில்களின் அர்ச்சகர்களின் விவரங்கள் அடங்கிய பதாகைகள் வெளியிடப்பட்டு தமிழில் அர்ச்சனை செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் தமிழில் வழிபட வேண்டும் என்ற தமிழ்நாட்டு மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு குறிப்பிட்ட […]

செய்திகள்

செப்.1 ந்தேதி முதல் வாகனங்களுக்கு ‘பம்பர் டூ பம்பர்’ காப்பீடு கட்டாயம்

சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு சென்னை, ஆக. 26– செப்டம்பர் 1 ந்தேதி முதல் புதிய வாகனங்களுக்கு ‘பம்பர் டூ பம்பர்’ காப்பீடு கட்டாயம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒகேனக்கல்லில் நடந்த சாலை விபத்தில் மரணமடைந்த சடையப்பன் என்பவரின் குடும்பத்தினர் இழப்பீடு கேட்டு ஈரோடு மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், சடையப்பன் குடும்பத்திற்கு 14 லட்சத்து 65 ஆயிரம் […]

செய்திகள்

வன்னியர்களுக்கான 10.5 சதவீத தனிஒதுக்கீடுக்கு தடை இல்லை:சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை, ஆக. 25– வன்னியர்களுக்கான 10.5 சதவீத தனிஒதுக்கீட்டுக்கு இடைக்கால தடைவிதிக்க மறுத்த உயர்நீதிமன்றம், மாணவர் சேர்க்கை, பணி நியமனங்கள் நீதிமன்ற தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என்று கூறி உள்ளது. மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் இருந்த வன்னியர் சமூகத்தினருக்கு தனி இட ஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடைபெற்றது. இதனையடுத்து, முந்தைய தமிழ்நாடு அரசு இதற்கான சட்டத்தினை கொண்டு வந்தது. மேலும் தற்போதைய ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசும் வன்னியர்களுக்கான 10.5 சதவிகித உள்ஒதுக்கீட்டை செயற்படுத்தி அரசாணை பிறப்பித்து உள்ளது. […]

செய்திகள்

தமிழ்நாடு அரசு ஒரே மாதிரியாக மகப்பேறு விடுப்பு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை, ஆக. 20– மகப்பேறு விடுப்பில் பாரபட்சம் காட்டக்கூடாது என்று தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தற்காலிக பணியாளர்களுக்கும் மகப்பேறு விடுப்பு வழங்குவது குறித்த அரசாணையை அமல்படுத்த வேண்டும் என்று, வழக்கறிஞர் ராஜகுரு வழக்கு தொடுத்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், பணி வரன்முறை செய்யப்பட்ட ஊழியர்களுக்கும், வரன்முறைப்படுத்தப்படாத ஊழியர்களுக்கும் ஒரே மாதிரியாக, தமிழ்நாடு அரசு மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும். மகப்பேறு விடுப்பில் பாரபட்சம் காட்டக்கூடாது என்று […]

செய்திகள்

சிவசங்கர் பாபா ஜாமீன் மனு: சிபிசிஐடி பதிலளிக்க உத்தரவு

சென்னை, ஆக. 4– பாலியல் வழக்கில் கைதான சிவசங்கர் பாபா மீதான ஜாமீன் மனு மீது பதிலளிக்க சிபிசிஐடி போலீசாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை கேளம்பாக்கத்தை அடுத்த சுஷில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா அப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. அந்த புகாரின் பேரில் மூன்று போக்சோ வழக்குகளில் சிவசங்கர் பாபா மீது சிபிசிஐடி போலீசார் நடவடிக்கை எடுத்தனர். கடந்த ஜூன் 16ம் தேதி கைது செய்யப்பட்டு […]

செய்திகள்

மருத்துவப் படிப்பில் 69 சதவீத இடஒதுக்கீடு: நடப்பாண்டிலேயே அமல்படுத்த மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை, ஜூலை 19– தமிழ்நாட்டில் மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் 69 சதவீத இட ஒதுக்கீடு நடப்பு கல்வியாண்டில் அமல்படுத்த வேண்டும் என்றும் மத்திய அரசின் நிலைபாட்டை ஒரு வாரத்தில் தெரிவிக்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கு அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று, திமுக சார்பில் கடந்த ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு […]

செய்திகள்

நடிகர் விஜய் மேல் முறையீட்டு மனு: வேறு அமர்வுக்கு மாற்றம்

சென்னை, ஜூலை 19– சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் விஜய் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை, வரி தொடர்பான மேல்முறையீட்டு வழக்குகளை விசாரிக்கும் அமர்வுக்கு மாற்ற பதிவுத்துறை உத்தரவிட்டது. கடந்த 2012ம் ஆண்டு பிரிட்டன் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ‘ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட்’ காருக்கு, நுழைவு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு கேட்டு, நடிகர் விஜய் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டு, அத்துடன் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. வேறு அமர்வுக்கு […]

செய்திகள்

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு நிபந்தனை ஜாமீன்

சென்னை, ஜூலை. 7– அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை சாந்தினி கடந்த சில வாரங்களுக்கு முன்பு புகார் அளித்தார். அந்தப் புகாரில் மணிகண்டன் தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, தன்னுடன் 5 ஆண்டுகள் குடும்பம் நடத்தினார். அவரால் நான் மூன்று முறை கருவுற்று கருக்கலைப்பு செய்யப்பட்டேன். திருமணம் செய்யாமல் தன்னை ஏமாற்றியதுடன் அடித்து துன்புறுத்துகிறார் என போலீசில் புகார் […]