விழுப்புரம், அக் 25 செஞ்சி அருகே அமைந்துள்ளது கப்பை கிராமம். சரவணகுமார் என்பவர் அளித்தத் தகவலின் பேரில் விழுப்புரத்தைச் சேர்ந்த எழுத்தாளரும் வரலாற்று ஆய்வாளருமான கோ.செங்குட்டுவன், செஞ்சி நூலகர் பூவழகன் ஆகியோர் இங்கு கள ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது 5000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாறை ஓவியங்கள் கண்டறியப்பட்டன. இதுகுறித்து ஆய்வாளர் கோ.செங்குட்டுவன் கூறியதாவது:– கப்பை கிராமத்திலுள்ள மலைப் பகுதியில் ஆய்வு செய்தபோது இதில் அமைந்துள்ள குகைத்தளத்தில் தொல்பழங்கால ஓவியங்கள் இருப்பது கண்டறியப்பட்டன. மனிதன் மற்றும் விலங்கின […]