செய்திகள்

செங்கல்பட்டில் ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் 13 பேர் பலி

செங்கல்பட்டு, மே 5– செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில், கொரோனாவுக்கு சிகிச்சைப் பெற்று வந்த 13 நோயாளிகள் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்தனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் தினசரி எண்ணிக்கை 1,500ரை கடந்து வரும் நிலையில், அங்குள்ள  அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது. இந்நிலையில்  அரசு மருத்துவமனையில் நேற்று இரவு பத்து மணி முதல் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் மூச்சு திணறல் ஏற்பட்டு கொரோனா நோயாளிகள் 13 பேர் பலியானதாக தகவல்கள் […]

செய்திகள்

கொரோனா பரிசோதனையை தீவிரப்படுத்த அரசு முடிவு

சென்னை, மார்ச்.31-– தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வருவதால் 16 மாவட்டங்களில் கொரோனா பரிசோதனையை அதிகப்படுத்த தலைமைச்செயலாளர் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–- தமிழகத்தில் தினசரி கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வருவது குறித்த ஆலோசனை கூட்டம் தலைமைச்செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்றது. தமிழக சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், தற்போதைய கொரோனா நோய் தொற்று நிலை குறித்த விவரங்களை சமர்ப்பித்தார். அதன்படி […]

வர்த்தகம்

செங்கல்பட்டில் ஜாகோ ஹெல்த் நிறுவனத்தின் 3 புனரமைப்பு மருத்துவ மையங்கள்: சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் திறந்தார்

செங்கல்பட்டு, மார்ச் 1 புனரமைப்பு மருத்துவத்தில் ஒரு மிகப்பெரிய முன்னேற்றமாக ஜாகோ ஹெல்த் நிறுவனம் மூன்று அதிநவீன சிகிச்சை மையங்களை செங்கல்பட்டில் துவக்கி வைத்தது. செங்கல்பட்டு ஜீவன் மருத்துவமனை, ஜே.எஸ்.பி. மருத்துவமனை மற்றும் சாய் கருத்தரிப்பு மற்றும் மகப்பேறு மருத்துவமனைகளில் இயங்க துவங்கிய இந்த மையங்களை தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார். இந்த அதிநவீன புனரமைப்பு சிகிச்சை மையங்கள் செங்கல்பட்டு வாழ் மக்களுக்கு மிக முக்கியமான சேவைகளை வழங்கும். இந்த மூன்று மருத்துவமனைகளின் தலைவர்கள் […]

செய்திகள்

காஞ்சீபுரம் அரசு அருங்காட்சியகத்தில் புராதன சின்னங்கள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு

காஞ்சீபுரம்,பிப்.18–- காஞ்சீபுரம் பழைய ரெயில் ரோட்டில் மாவட்ட அரசு அருங்காட்சியகம் அமைந்துள்ளது. இங்கு பல்லவர் கால புராதன சின்னங்கள், எலும்பு துண்டுகள், பானை ஓடுகள், கற்சிற்பங்கள் உள்ளிட்டவை பாதுகாக்கப்பட்டு வருகிறது. செங்கல்பட்டு ராஜேஸ்வரி வேதாச்சலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வரலாற்றுத் துறை மாணவ, மாணவிகளுக்கு இந்த அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள புராதன சின்னங்கள் குறித்து அருங்காட்சியக காப்பாட்சியர் சு.உமாசங்கர் விளக்கமளித்தார். மேலும் புராதனை சின்னங்களை பாதுகாப்பதன் அவசியம் குறித்து கோரக்கர் அறிவர் பள்ளியைச் சேர்ந்த ஆதிசங்கரன் […]

செய்திகள்

ரூ.66 கோடி செலவில் துணைமின்நிலையங்கள்: எடப்பாடி துவக்கினார்

* வேதாரண்யத்தில் ரூ.24 கோடியில் 110/11 கி.வோ. துணைமின்நிலையம் * செங்கல்பட்டு உள்பட 6 மாவட்டங்களில் ரூ.42 கோடி துணைமின்நிலையம் ரூ.66 கோடி செலவில் துணைமின்நிலையங்கள்: எடப்பாடி துவக்கினார் சென்னை அண்ணா சாலையில் ரூ.56 கோடியில் மின் தொடரமைப்பு கட்டிடத்தையும் திறந்தார் சென்னை, பிப்.9– முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று (8–ந் தேதி) தலைமைச் செயலகத்தில், எரிசக்தித்துறையின் சார்பில், நாகப்பட்டினம் மாவட்டம் – வேதாரண்யத்தில் 23 கோடியே 81 லட்சத்து 86 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள […]