நியூயார்க், ஏப். 11- அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஆற்றில் ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து நொறுங்கியதில் 3 குழந்தைகள் உள்பட 6 பேர் பலியாகினர். ஹட்சன் ஆற்றின் மீது லாங்ரேஞ்சர் ரக சுற்றுலா ஹெலிகாப்டர் வியாழக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் (அமெரிக்க நேரப்படி) பறந்துகொண்டிருந்தது. அப்போது, திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் ஆற்றில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில், ஹெலிகாப்டரின் விமானி மற்றும் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த தம்பதி மற்றும் அவர்களின் மூன்று குழந்தைகளும் பலியானதாக அமெரிக்க […]