செய்திகள்

காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடகா அரசு மறுப்பு

சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்வோம்: தமிழக அரசு அறிவிப்பு சென்னை, ஜூலை 13– காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவின்படி, தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என்று கர்நாடகம் கைவிரித்து விட்டது. இதனையடுத்து காவிரி விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்வோம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகம்–கர்நாடகம் இடையே காவிரி நீரை பங்கிட்டு கொள்வதில் பல ஆண்டுகளாக பிரச்சினை நீடித்து வருகிறது. காவிரி விவகாரத்தில் தீர்வு காண்பதற்காக காவிரி ஒழுங்காற்று குழு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு […]

Loading

செய்திகள்

‘‘விவாகரத்து பெற்ற இஸ்லாமியப் பெண் பராமரிப்புத் தொகை பெறலாம்’’: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

புதுடெல்லி, ஜூலை 10– விவாகரத்துப் பெற்ற இஸ்லாமிய பெண்களும், முன்னாள் கணவரிடமிருந்து பராமரிப்புத் தொகை பெறலாம் என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு 125ல் பராமரிப்புத் தொகை பெற முடியும் என்றும் தெளிவுபடுத்தியிருக்கிறது. குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு 125 ஆனது, பராமரிப்புத் தொகை உள்பட மனைவிகளின் உரிமைகள் என்பது, எந்த மதத்தையும் பொருட்படுத்தாமல், அனைத்துப் பெண்களுக்கும் பொருந்தும் என்பதை உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டி, வரலாற்றுச் சிறப்பு மிக்க உத்தரவை பிறப்பித்துள்ளது. முன்னாள் மனைவிக்கு மாதந்தோறும் […]

Loading

செய்திகள்

செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு ஒத்திவைப்பு

புதுடெல்லி, ஜூலை 10– ஜாமீன் வழங்கக் கோரிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஜூலை 12-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது. அண்ணா தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது பண மோசடியில் ஈடுபட்ட பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து ஓராண்டு ஆகியும் ஜாமீன் வழங்காதது குறித்து, செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் முகுல் இந்த […]

Loading

செய்திகள்

கோவில் நிதியை ஆடம்பர செலவுக்கு பயன்படுத்தக்கூடாது: சுப்ரீம் கோர்ட் கருத்து

புதுடெல்லி, ஜூலை9- கோவில் நிதியை ஆடம்பர செலவுக்கு பயன்படுத்தக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. ஆலயம் காப்போம் அமைப்பின் தலைவர் பி.ஆர்.ரமணன் சார்பில் ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ‘தமிழ்நாட்டில் கோவில்களுக்கு வரும் உண்டியல் பணம் உள்ளிட்ட நன்கொடை நிதியை செலவிடும் திட்டம் குறித்தும், அந்த நிதி அத்தியாவசியமற்ற வகையில் சொகுசு காரியங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு பொதுநல நிதிக்கு எடுத்துக் கொள்ளப் பட்டவற்றை மீண்டும் கோவில்களுக்கு அளிக்க வேண்டும்’ என்றும் அந்த மனுவில் அவர் கூறியிருந்தார். இந்த […]

Loading

செய்திகள்

‘நீட்’ மறுதேர்வு நடத்த வேண்டும்: சுப்ரீம் கோர்ட் அறிவுரை

புதுடெல்லி, ஜூலை9-– ‘நீட்’ முறைகேடு வழக்கில் வினாத்தாள் கசிவு தெளிவாகி இருக்கிறது, குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாவிட்டால், மறுதேர்வு நடத்த வேண்டும் என்று தேசிய தேர்வு முகமைக்கு சுப்ரீம் கோர்ட் அறிவுரை வழங்கியுள்ளது. இளநிலை மருத்துவம், பல் மருத்துவம், ஆயுஷ் மற்றும் அது தொடர்பான படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு கடந்த மே 5ம்தேதி நடந்தது. 24 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதிய இந்த தேர்வில் ஆள் மாறாட்டம், வினாத்தாள் கசிவு என பல்வேறு புகார்கள் எழுந்தன. ஜூன் 4ம்தேதி தேர்வு […]

Loading

செய்திகள்

சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை எதிரொலி: ‘நீட்’ கலந்தாய்வு ஒத்திவைப்பு

சென்னை, ஜூலை 6– சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை எதிரொலியாக ‘நீட்’ கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எம்.பி.பி.எஸ். படிப்புக்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் 5-ந்தேதி நடைபெற்றது. இந்த தேர்வுக்கு முன்னதாக வினாத்தாள் கசிந்ததாக (லீக்) குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக பீகார் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். கடந்த மாதம் ‘நீட்’ தேர்வு முடிவு வெளியானது. பலர் தேர்வில் பெற முடியாத மதிப்பெண்களை எல்லாம் பெற்றது தெரியவந்தது. அப்போது கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதும் தெரிய வந்தது. 1500-க்கும் […]

Loading

செய்திகள்

சுப்ரீம் கோர்ட் – காவேரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி நீரைத் திறந்துவிட கர்நாடக அரசுக்கு அழுத்தம் கொடுங்கள்

தி.மு.க. அரசுக்கு ஓ.பி.எஸ். வலியுறுத்தல் சென்னை, ஜூன் 17– உச்சநீதிமன்றம் மற்றும் காவேரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பிற்கிணங்க ஜூன் மாதத்திற்கான நீரை தமிழ்நாட்டிற்கு திறந்துவிட கர்நாடக அரசுக்கு அழுத்தம் அளிக்குமாறு தி.மு.க. அரசை ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து ஓ. பன்னீர்செல்வம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– உச்சநீதிமன்றம் மற்றும் காவேரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி தமிழ்நாட்டிற்கு மாதந்தோறும் குறிப்பிட்ட அளவு நீரை கர்நாடக அரசு திறந்துவிடவேண்டும். ஆனால், தமிழ்நாட்டிற்கு திறந்துவிட வேண்டிய உரிய […]

Loading

செய்திகள்

சேவை குறைபாட்டுக்காக வக்கீல்கள் மீது வழக்கு தொடர முடியாது: சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு

புதுடெல்லி, மே.15- சேவை குறைபாட்டுக்காக நுகர்வோர் கோர்ட்டில் வக்கீல்கள் மீது வழக்கு தொடர முடியாது என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது. வக்கீல்கள் அளிக்கும் சேவை, 1986-ம் ஆண்டின் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் வரம்புக்குள் வரும் என்றும், அதனால் சேவை குறைபாடு இருந்தால், வக்கீல்கள் மீது நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடரலாம் என்றும் கடந்த 2007ம் ஆண்டு தேசிய நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையம் ஒரு வழக்கில் தீர்ப்பு அளித்தது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வக்கீல் சங்கங்களும், […]

Loading

செய்திகள்

‘மிக்ஜம்’ புயல் நிவாரணத்துக்கு ரூ.276 கோடி தமிழ்நாட்டை மத்திய அரசு வஞ்சிக்கிறது

ஸ்டாலின் குற்றச்சாட்டு சென்னை, ஏப்.28-– ‘மிக்ஜம்’ புயல், மழைச்சேத நிவாரணமாக தமிழ்நாடு அரசு ரூ.38 ஆயிரம் கோடி கேட்டது. ஆனால் மத்திய அரசு ரூ.276 கோடி நிதி வழங்கியுள்ளது. எனவே தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிக்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். மத்திய அரசு மழை வெள்ள நிவாரணத்துக்கு நிதி ஒதுக்கியது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:-– `மிக்ஜம்’ புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாகத் தமிழ்நாடு கோரியது 37 ஆயிரத்து 907 […]

Loading

செய்திகள்

‘நோட்டா’வை விட குறைந்த வாக்கு பெறும் வேட்பாளருக்கு தடை விதிக்கக் கோரி வழக்கு

தலைமை தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் புதுடெல்லி, ஏப். 27– ‘நோட்டா’வை விட குறைந்த வாக்கு பெறும் வேட்பாளருக்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதில் அளிக்கும் படி தலைமை தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்ப சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. நாட்டில் நடைபெறும் தேர்தலில் பல கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்களில் ஒருவருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை, அவர்கள் அனைவருக்கும் எதிராக வாக்களிக்க விரும்புபவர்களுக்காக ‘நோட்டா’ என்ற வசதி அறிமுகம் செய்யப்பட்டது. வாக்காளர்களின் […]

Loading