புதுடெல்லி, ஆக. 14– சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பாக பணியாற்றிய தமிழகத்தைச் சேர்ந்த 23 காவல் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் டிஜிபி வன்னியபெருமாள், ஏடிஜிபி அபின் தினேஷ் மோடாக் ஆகிய இருவருக்கு சிறப்புமிக்க சேவைக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் 78வது சுதந்திரதின விழா நாடு முழுவதும் நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்திய அளவில் தனிச்சிறப்புடன் பணியாற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு ஆண்டுக்கு 2 முறை குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினத்தையொட்டி, ஜனாதிபதி விருதுகள் […]