செய்திகள்

தேர்தலுக்குப் பிறகும் ஊரடங்கு இல்லை: சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்

சென்னை, ஏப். 5– தேர்தலுக்குப் பிறகும் ஊரடங்கு நடைமுறைப்படுத்தும் திட்டம் ஏதும் இல்லை என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார். தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ள நிலையில், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ். வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:– தமிழகத்தில் அச்சம் தரும் வகையில் கொரோனா பாதிப்பு, படிப்படியாக அதிகரிக்கிறது. வாக்காளர்கள் நாளை முகக்கவசம் அணிந்துதான் வாக்குச் சாவடிக்குச் செல்ல வேண்டும். வாக்குச் சாவடிகளில் முகக்கவசம் […]

செய்திகள்

மும்பையிலிருந்து வந்தால் கொரோனா பரிசோதனை கட்டாயம்

சென்னை, பிப்.23- தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்து கொண்ட 100 பேரில் ஒருவருக்கே கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், மும்பையிலிருந்து வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என்றும் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையின் 8-ம் ஆண்டு தொடக்க விழா நேற்று அம்மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. இந்த விழாவுக்கு சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் நாராயணபாபு, ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனை இயக்குனர் […]

செய்திகள்

தேர்தல் பணியில் ஈடுபடுவோருக்கும் கொரோனா தடுப்பூசி: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல்

சென்னை, பிப்.16- ‘முன்கள பணியாளர்களை போல தேர்தல் பணியில் ஈடுபடுவோருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும்’, என சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். தமிழகத்தில் நேற்று முன்தினம் 2-வது முறையாக கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. இந்த நிலையில் நேற்று சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில், சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் 2வது முறையாக தடுப்பூசி போட்டுக் கொண்டார். அப்போது மருத்துவமனை ‘டீன்’ டாக்டர் தேரணிராஜன் உடனிருந்தார். அதனைத் தொடர்ந்து டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் […]

செய்திகள்

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி

தமிழகம் முழுவதும் 8–ந்தேதி தடுப்பூசி ஒத்திகை 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி சென்னை, ஜன.6– சுகாதார பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், முதியவர்கள் என 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா தடுப்பூசியை அவசர காலத்தில் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் இம்மாதம் 13ம் தேதி முதல் விநியோகிக்க தயாராக உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. […]

செய்திகள்

பறவைக் காய்ச்சல் மனிதர்களுக்கும் பரவலாம்

சென்னை, ஜன. 5– பறவைக் காய்ச்சல் மனிதருக்கும் பரவலாம் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– கேரளாவில் பரவியுள்ள பறவை காய்ச்சல் மனிதர்களுக்கும் பரவ வாய்ப்பு உள்ளது. கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன. வாகனங்களில் கிருமி நாசினி தெளித்த பிறகே அனுமதிக்கப்படுகிறது. தமிழகத்தில் பரவாமல் தடுக்க தடுப்பு நடவடிக்கை தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது. மழைக்காலம் என்பதால் டெங்கு பரவாமல் தடுக்க […]

செய்திகள்

தமிழகத்தில் 17 இடங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை

சென்னை, ஜன.2– தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், நெல்லை, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் 17 இடங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை இன்று நடைபெற்றது. சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் முதலாவதாக கொரோனா தடுப்பூசி ஒத்திகையை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். தேர்வு செய்யப்பட்ட 25 பேருக்கு 2 மணி நேரத்தில் தடுப்பூசிக்கான ஒத்திகை நடந்தது. காலை 9 மணி முதல் காலை 11 மணி வரை தடுப்பூசி ஒத்திகை நடந்தது. ஊசி எதுவும் போடாமல் கோவின் […]

செய்திகள்

பிரிட்டனில் புதிய வகை கொரோனா: தமிழகத்தில் தீவிர கண்காணிப்பு

சென்னை, டிச. 23 பிரிட்டனில் புதியவகை கொரோனா பரவி வரும் நிலையில் தமிழகத்தில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது:- பிரிட்டனில் புதிய வகை கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் தமிழகத்தில் வீரியமிக்க கொரோனா பரவாமல் இருக்க தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிரிட்டனில் இருந்து வந்தவர்களை அடையாளம் காணும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் இங்கிலாந்தில் இருந்து தமிழகம் வந்த […]

செய்திகள்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது

சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி சேலம், டிச.17– தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்துள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் பிரசவ வார்டில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்துள்ளது. 75 ஆயிரம் பேருக்கு தொற்று பரிசோதனை செய்யப்பட்டவர்களில் 1,100 பேருக்கு மட்டுமே தொற்று கண்டறியப்படுகிறது. தொற்று பாதிப்பால் ஏற்படும் உயிரிழப்பு 1 சதவிகிதத்திற்கு கீழ் […]