செய்திகள்

மோடி அரசின் செயலற்ற தன்மையால் அண்டை நாடுகளுக்கும் ஆபத்து: ராகுல்

டெல்லி, ஜன. 15– மோடி அரசாங்கம், தனது சொந்த நிலத்தை சீனாவிடம் ஒப்படைத்துவிட்டு, இப்போது அண்டை நாடுகளை ஆபத்தில் ஆழ்த்துவதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இந்தியாவிற்கு புதிய அச்சுறுத்தலாக, சீனா இப்போது பூட்டானில் சட்டவிரோதமாக கிராமங்களை கட்டுவதாக ஒரு செய்தி அறிக்கையை ராகுல் காந்தி மேற்கோள் காட்டியுள்ளார். இதை குறிப்பிட்டு ‘மோடி அரசு முதலில் நமது நிலத்தை ஒப்படைத்துவிட்டு, இப்போது சீனாவை பின்னுக்குத் தள்ளுவதில் அதன் செயலற்ற தன்மையால் நமது நெருங்கிய அண்டை நாடுகளை ஆபத்தில் […]

நாடும் நடப்பும்

‘பாஸ்டேக்’ ஈட்டும் வசூல் சாலை மேம்பட உதவுகிறதா?

ஆர். முத்துக்குமார் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் போக்குவரத்து மிகப்பெரிய பங்களிப்பு தரும் துறையாகும். குறிப்பாக சாலை போக்குவரத்து, வளர்ச்சிகளுக்கு உந்து சக்தியாக இருக்கிறது. 50 ஆண்டுகளுக்கும் முன்பே அமெரிக்காவும், பல ஐரோப்பிய நாடுகளும் அதில் சாதித்தது. கடந்த 30 ஆண்டுகளில் சீனாவில் சாலை புரட்சியை ஏற்படுத்தியது, அங்கே நாட்டில் பொருளாதார மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது உலகிலேயே மிகப்பெரிய பொருளாதாரமாகவும் உயர்ந்து விட்டது. சீனாவின் அனைத்து மாநிலங்களிலும் உள்ள முதன்மையான சாலைகள், நமது நாட்டின் தங்க நாற்கர சாலைகளை […]

செய்திகள்

சீனா வெளியிட்ட வீடியோ சர்ச்சை: தேசியக்கொடி ஏற்றி இந்தியா பதிலடி

டெல்லி, ஜன. 5– கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவம் தனது தேசிய கொடியுடன் புத்தாண்டு வாழ்த்து கூறிய வீடியோ சர்ச்சையான நிலையில், அதற்கு பதிலடியாக இந்திய ராணுவம் கல்வான் பள்ளத்தாக்கில் மூவண்ண தேசியக் கொடி ஏற்றிய புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 2020ம் ஆண்டில் இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் அத்துமீறி நுழைய முயன்றதால் இரு நாட்டு படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தி, மோதல் நடந்த […]

செய்திகள்

தைவான் விவகாரம்: அமெரிக்காவுக்கு சீனா கடும் எச்சரிக்கை

பீஜிங், டிச. 31– தைவான் விவகாரத்தில் அமெரிக்கா தலையிட்டால் மோசமான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று சீனா பகிரங்கமாக எச்சரித்துள்ளது. சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ, நேற்று தைவான் விவகாரம் தொடர்பாக பேசும்போது கூறியுள்ளதாவது:– அமெரிக்கா தேவையில்லாமல் தைவானை ஊக்குவித்து அந்நாட்டிற்கு சுதந்திரம் கேட்கும் சக்தியினை வழங்கி வருகிறது. இதன் மூலம் அமெரிக்கா தைவானை அழிவு பாதையில் அழைத்து செல்கிறது என்று குற்றம்சாட்டியுள்ளார். அமெரிக்காவுக்கு எச்சரிக்கை இதுபோன்ற நடவடிக்கைகள் அமெரிக்காவை தான் மோசமாக பாதிக்கும். எனவே […]

செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் ஒரே நேரத்தில் 800 பேர் வரை பரிசோதனை செய்ய ஏற்பாடு

சென்னை, டிச.7- சென்னை விமான நிலையத்தில் ஒரே நேரத்தில் 800 பேர் வரை பரிசோதனை செய்ய கருவிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக விமான நிலைய ஆணையக அதிகாரிகள் தெரிவித்தனர். ஒமிக்ரான் வைரஸ் பரவல் காரணமாக தென்கிழக்கு ஆசிய நாடுகளான தென் ஆப்பிரிக்கா, பிரேசில், இங்கிலாந்து, வங்காளதேசம், மொரீஷியஸ், போஸ்ட்வானா, நியூசிலாந்து, ஜிம்பாப்வே, சிங்கப்பூர், ஹாங்காங், சீனா, இஸ்ரேல் ஆகிய நாடுகளில் இருந்து சென்னை விமான நிலையம் வரும் பன்னாட்டு விமான பயணிகளுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்பட்டு அதன் […]

நாடும் நடப்பும்

கார்பன் உமிழ்வு ஆண்டிற்கு மில்லின் டன் : மாசு தூசு கட்டுப்பாட்டில் சீனாவின் மெத்தனம்

ஆர். முத்துக்குமார் உலகெங்கும் சுற்றுலா பொருளாதாரம் ஸ்தம்பித்திருக்கும் நிலையில் விண்வெளியில் 4 சுற்றுலா பயணிகள் வெளிவட்டப் பாதை வரை சென்று பத்திரமாக பூமி திரும்பியதை கண்டோம். பிரபல பணக்காரர் எலன்மஸ்க் நடத்தும் ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனம் தான் இந்த அபூர்வ சாதனையை செய்தது. சமீபமாக கொரோனா பெரும் தொற்று காரணமாக உலகெங்கும் முழு ஊரடங்கை ஏற்படுத்தியதால் மிகவும் பாதிக்கப்பட்டது சுற்றுலாத் துறையாகும். விமான சேவைகள், ரெயில், சாலை போக்குவரத்துக்கள் தடை பெற்றதாலும் பெரும் தொற்று பீதி தனியாத […]

செய்திகள்

சீனாவை துவம்சம் செய்யும் கனமழை: சீன பெருஞ்சுவரின் ஒரு பகுதி சேதம்

பெய்ஜிங், அக். 12– சீனாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல்வேறு மாகாணங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. வடக்கு சீனாவின் ஹீபெய் மாகாணத்தில் பெய்து பலத்த மழையால் சிட்டியா ஜுவாங் என்ற நகரமே வெள்ளத்தில் மிதக்கின்றது. அதேபோல், ஷான்ஸி மாகாணத்தில் உள்ள டாலி நகரத்தை வெள்ளப்பெருக்கு சூழ்ந்துள்ளது. ஆயிரக்கணக்கான ஏக்கர் விலை நிலங்கள் மூழ்கி உள்ளன. பெருவெள்ளம் நெடுஞ்சாலைகளை அடித்து சென்றுவிட்டதால், டாலி கவுண்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட சிறு கிராமங்கள் இதர பகுதிகளில் இருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளன. சீன […]

செய்திகள்

இந்தியா–சீனா இடையே 13 வது சுற்று பேச்சுவார்த்தை தோல்வி: ராணுவம்

லடாக், அக். 11– இந்திய-சீன ராணுவத்துக்கு இடையே நேற்று நடைபெற்ற 13வது சுற்று பேச்சுவார்த்தையில், இந்தியாவின் ஆலோசனைகளை சீனா ஏற்க மறுத்ததால் எவ்வித முடிவும் எட்டப்படவில்லை என்று இந்திய ராணுவத் தரப்பில் தெரிவிக்கபட்டுள்ளது. சீனா தனது ராணுவ வீரர்களுக்கு எல்லை கட்டுப்பாட்டு பகுதி அருகே கொள்கலன் மூலம் தங்குமிடங்களை அமைத்துள்ளது தெரியவந்துள்ளது. டாஷிகோங், மான்சா, ஹாட் ஸ்பிரிங்ஸ் மற்றும் சுருப் போன்ற இடங்களின் அருகே தங்குமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இருதரப்பு மோதல் தங்குமிடங்கள் மட்டுமல்லாது, ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட, நிலத்தில் […]