இஸ்லாமாபாத், ஜூலை 20– பாகிஸ்தானில் கடந்த ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, அந்நாட்டில் ஹிந்துக்களின் எண்ணிக்கை 38 லட்சமாக உள்ளது. இது அந்நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 1.61 சதவீதம் ஆகும். பாகிஸ்தானில் கடந்த 2023-ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு தரவுகளை, அந்நாட்டின் புள்ளியியல் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, நாட்டின் மொத்த மக்கள்தொகை சுமார் 24 கோடியாகும். இதில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 23.16 கோடி. அதாவது, 96.35 சதவீதம். கடந்த 2017-ம் ஆண்டில் பாகிஸ்தான் மக்கள்தொகை சுமார் 20 […]