செய்திகள்

பாரதீய ஜனதா மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா

சென்னை, செப். 16– பாரதீய ஜனதா மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், எனது கொரோனா பரிசோதனை முடிவுகள் இன்று காலை வெளியானது. அதில் எனக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளேன். நான் விரைவில் குணமடைய வாழ்த்திய அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள் எனப் பதிவிட்டுள்ளார்.