சென்னை, ஜன. 25– வேங்கைவயல் வழக்கில் நேர்மையான விசாரணை நடப்பதற்கு, வழக்கை சி.பி.ஐ.க்கு பரிந்துரைக்க வேண்டும் என்பது தான் தமிழக பா.ஜ.க.வின் நிலைப்பாடு என அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில், பட்டியல் சமூக மக்களுக்கான மேல்நிலை நீர்த்தொட்டியில் சமூக விரோதிகள் மனித மலம் கலந்ததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டதை அடுத்துத் தொடர்ந்த வழக்கு, எந்த முன்னேற்றமும் இன்றி, 2 ஆண்டுகளைக் கடந்துவிட்டது. தற்போது பட்டியல் […]