சென்னை, பிப். 17– சட்ட விரோதமாக தாது மணல் எடுக்கப்பட்ட வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்றம் செய்து ஐகோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டனர். தமிழகத்தின் தென் மாவட்டங்களான திருநெல்வேலி, துாத்துக்குடி, கன்னியாகுமரி கடலோரப் பகுதிகளில் தாது மணல் அதிக அளவில் உள்ளது. இதில், கதிரியக்க தன்மை கொண்ட கனிமங்கள், அதிக விலை மதிப்புடைய தாது உப்புகள் உள்ளன. இதை அறிந்த சில நிறுவனங்கள், தாது மணலை சட்ட விரோதமாக எடுத்து, வெளிநாடுகளுக்கு விற்பனை செய்து உள்ளன. கடந்த 2012 முதல் […]