முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு சென்னை, மார்ச் 25–- விழுப்புரம் அருகே தலையில் கல் விழுந்து உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:–- விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், திருக்குணம் மதுரா கொசப்பாளையம் கிராமத்தில் நேற்று முன்தினம் (23-ந்தேதி) நடந்த வாய்க்கால் பராமரிப்புப் பணியின்போது, வாய்க்கால் நடுவில் இருந்த பாறையை அகற்றும் பொருட்டு வெடிவைத்து தகர்த்துள்ளனர். அப்போது, சிதறிய கருங்கல் எதிர்பாராதவிதமாக அருகில் […]