வாழ்வியல்

சிறுநீரில் சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் முள்ளங்கி

முள்ளங்கி குத்துச் செடி இனத்தைச் சேர்ந்தது. இதில் 3 வகைகள் உள்ளன. அவை 1. வெள்ளை முள்ளங்கி 2. சிவப்பு முள்ளங்கி 3. மஞ்சள் முள்ளங்கி ஆகியவைகள் ஆகும். முள்ளங்கியில் சுண்ணாம்புச் சத்தும், வைட்டமின் சத்தும் உள்ளன. இது வயிற்றில் ஏற்படும் பல தொல்லைகளைக் குணப்படுத்துகிறது. இது பசியை அதிகமாக்கச் செய்வதோடு, சாப்பிடுவதில் விருப்பத்தையும் உண்டாக்கும். மலச்சிக்கலையும் போக்கும். வெள்ளை முள்ளங்கி குளிர்ச்சித் தன்மை பொருந்தியது. அதனால் உஷ்ண தேகம் உள்ளவர்களும் மூல நோய்க்காரர்களும் இதைத் தாராளமாகச் […]