சிறுகதை

சோப்பு – ராஜா செல்லமுத்து

தியா எப்போதும் போல அன்றும் தன் விளம்பரப் படத்திற்காக ஸ்டுடியோவுக்குள் இருந்தார். அவர்களை வரவேற்று உள்ளே அழைத்து சென்றார் உதவி இயக்குனர். உள்ளே சென்ற தியாவை இயக்குனர் வரவேற்று சோப்பு விளம்பரம் பற்றி சொல்லிக் கொண்டிருந்தார் . அது ஒரு குளியலறை காட்சி. குளித்துக்கொண்டே சோப்பின் நறுமணத்தையும் சோப்பையும் பற்றிச் சொல்ல வேண்டும் என்று காட்சியை விளக்கினார் இயக்குனர். இந்த சோப்போட பெயர் என்ன என்று கேட்டாள் தியா. சோப்பை எடுத்து தியாவின் கையில் கொடுத்த இயக்குனர் […]

சிறுகதை

காரணம்- ஆவடி ரமேஷ்குமார்

கோவில் குருக்கள் சீதாராமனின் வீடு. ஒரு சோபாவில் குருக்களும் அவர் மனைவியும் அமர்ந்திருக்க, எதிர் சோபாவில் ராகவனும் சாந்தியும் அமர்ந்திருந்தார்கள். சாந்தி தான் ஆரம்பித்தாள். ” சாமி, எங்க மகனுக்கு அக்டோபர் மாதம் 16- ம் தேதி கல்யாணம் வச்சிருக்கோம். நீங்க எப்படி எங்க கல்யாணத்தை நடத்தி வச்சீங்களோ அதே மாதிரி எங்க மகனுக்கும் வந்து கல்யாணத்தை நடத்தி வைக்கணும்” ” உங்க பிள்ளையாண்டானுக்கு கல்யாணமா…ரொம்ப சந்தோஷம்.ஆனா…அக்டோபர் மாதம் 16- ம் தேதி…” என்று இழுத்தார் குருக்கள். […]

சிறுகதை

அதிகப்படியான ஆசை-ராஜா செல்லமுத்து

அன்று வெளியான திரைப்படத்திற்கு தான் மட்டும் செல்லாமல் தன் நண்பர்களுக்கும் சேர்த்து டிக்கெட் எடுத்தான் ராஜேஷ் .அவன் எப்போது போனாலும் எங்கே போனாலும் திரைப்படம் ஆகட்டும் நல்ல விஷயங்கள் ஆகட்டும் நல்ல நண்பர்களை அழைத்து செல்வது ராஜேஷின் வழக்கம் . இந்த முறை புதிதாக வெளியான திரைப்படத்திற்கு சுனிலை அழைத்துச் சென்றான் ராஜேஷ் அவன் இருக்கும் இடத்திலிருந்து திரையரங்கம் பக்கம். சுனில் தான் கொஞ்சம் முன்னதாக வரவேண்டும் . ஆனால் சுனில் எந்தவித தகவலும் தராமல் இருந்தார். […]

சிறுகதை

அன்பின் உச்சம் -ராஜா செல்லமுத்து

80 வயது தாண்டிய தன் மனைவிையை 90 வயது தாண்டிய கணவன் எங்கு சென்றாலும் அவர் கையை பிடித்துக் கொண்டு தான் அழைத்துச் செல்வார் இது வீதியில் பார்ப்பவர்களுக்கு வியப்பாக இருந்தது. ஒரு சிலருக்கு அது எரிச்சலை தந்தது. என்ன இருந்தாலும் இந்தக் கிழவியை இந்தக் கிழவன் கையப் புடிச்சிட்டு கொட்டிட்டு போறது நியாயமல்ல. இந்த வயசுலயும் அந்தக் கிழவி மேல இவ்வளவு பாசமா? அப்படின்னு மத்தவங்க நினைப்பாங்க. ஒரு சிலர் பொறாமை படுவாங்க என்று அந்த […]

சிறுகதை

காணவில்லை – ஆவடி ரமேஷ்குமார்

பெங்களூர். அன்றைய தினசரியில் தன் படத்தைப்போட்டு ‘ 2018 முதல் காணவில்லை’ என்று வந்திருந்த அந்த விளம்பரத்தை படித்த இளங்கோ விக்கி விக்கி அழுதான். அதில் அவனின் தங்கை எழுதியிருந்த வாசகம் கீழே.. ‘ அண்ணா, நமது பெற்றோர்கள் இறந்து விட்டார்கள்.நீயே நம் வீட்டையும் நிலத்தையும் வைத்துக்கொள். இந்த விளம்பரத்தைக் கண்டதும் என்னை பார்க்க தயவு செய்து அம்பத்தூருக்கு வா. அண்ணா! ப்ளீஸ்! இப்படிக்கு, உன் அன்புத்தங்கை ஹேமா செல்: 96……932 ‘ “அடக்கடவுளே..அம்மா..அப்பா.!நீங்க ரெண்டு பேருமே […]

சிறுகதை

கடன் – ராஜா செல்லமுத்து

நிர்மலுக்குக் கடன் கொடுத்தவன் ஒரு நாளைக்கு ஆயிரம் முறை பேசுவான். ஆனால் எதற்கும் நிர்மல் செவி கொடுக்க மாட்டான். பணம் கொடுத்தவன் குய்யோ முறையோ என்று கத்தினாலும் அதைப்பற்றி எல்லாம் செவிசாய்க்காமல் இருப்பான் நிர்மல். கடன் கொடுத்தவன் தன் நண்பர்கள், சொந்தங்கள் அத்தனை பேருக்கும் சொல்லியிருப்பான். நிர்மல் ஏன் இப்படி செய்கிறான்? அவனுக்கு ஏன் கடன் கொடுத்தீங்க என்று தான் கேட்பார்கள். கஷ்டம்னு சொன்னார். அதுதான் கொடுத்தோம் என்று கடன் கொடுத்தவன் சொல்ல அதெல்லாம் கிடையாது .பணம் […]

சிறுகதை

காலத்தை வென்ற காதல்! – டிக்ரோஸ்

பணியிட காதல்களை பற்றி நிறையவே அறிந்தவராக இருப்பின் இச்சிறுகதை ‘காதல்… பிறகு கல்யாணம்’ என்ற வகையறா கிடையாது. மிர்லா வந்துட்டா! கிரிஸ் முகத்தில் பிரகாசம்! 25 வயது மிர்லா எப்படி இருக்கிறா? என்று கிரிஸ் மானிடரை எட்டிப் பார்க்காதீங்க! உரிய அங்க வடிவங்களை துல்லியமாய், கணினி கச்சிதமாக தயாரானவள்! அவளுக்கே உரிய அழகிய அங்கங்கள் கொண்டவள். 25–ம் நூற்றாண்டின் சகல வசதிகளால் உருவானவள் மிர்லா. 500 ஆண்டுகளுக்கு முந்தய விஞ்ஞான வினோதங்கள் இன்று நிதர்சன உண்மையாகி விட்ட […]

சிறுகதை

ஆம்லேட்- ராஜா செல்லமுத்து

சரியாக 9 மணிக்கு தன் அலுவலகத்தில் இருக்க வேண்டும் என்று அருள் கருப்புவிடமும் செல்வத்திடம் சொல்லியிருந்தார். அதிகாலையே எழுந்த செல்வம் குளித்து முடித்து கருப்புக்கு போன் செய்தான். கருப்பு நீங்க எத்தனை மணிக்கு கிளம்புவே என்று கேட்டான். நான் ஏழு மணிக்கெல்லாம் கிளம்பி விடுவேன் என்று கருப்பு பதில் சொன்னார். ஓகே எங்க என்ன பிக்கப் பண்ணிக்கிருவ? என்று செல்வம் கேட்டான். வழக்கம்போல நிற்கிற பிள்ளையார் கோவில்ல நில்லு என்று கருப்பு சொன்னார். 9 மணி அப்பாயிண்ட்மெண்ட் […]

சிறுகதை

கால்ரூபாய் காசும் காளை மாடுகளும்! – சின்னஞ்சிறுகோபு

அது 1952-ம் வருடம். இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்து ஐந்து வருடங்கள் ஆகிவிட்டது. சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தல் வந்தது. நாடெங்கும் உணவு தட்டுப்பாடு. அப்போது ஆட்சிப் பொறுப்பில் இருந்த காங்கிரஸ் கட்சி, ரேஷனில் கொடுத்து வந்த 12 அவுன்ஸ் அரிசியை 8 அவுன்ஸாக குறைத்தது. அதோடு, ‘மக்கா சோளம் சாப்பிடுங்கள்’ என்று காங்கிரஸ் கட்சி வடக்கேயிருந்து மக்கா சோளத்தைக் கொண்டு வந்து தமிழகத்தில் அறிமுகப் படுத்தியது. பெரிய எதிர்கட்சியாக இருந்த கம்யூனிஸ்ட் கட்சியோ ‘ஆறு அவுன்ஸ் கட்சி […]

சிறுகதை

என்னை மறந்திடுங்க- ஆவடி ரமேஷ்குமார்

” இங்க பாருங்க மாதேஷ், எங்கப்பாவும் அம்மாவும் ரொம்ப நல்லவங்க.என் மேல உயிரையே வச்சிருக்காங்க.அதே மாதிரித்தான் எங்கக்கா மேலயும் உயிரையே வச்சிருந்தாங்க.ஆனா எங்கக்கா எங்கப்பா அம்மாவை மதிக்காம யாரோ ஒரு வேலை வெட்டியில்லாதவனை போய் காதலிச்சு, அவன் பேச்சைக்கேட்டுட்டு எங்க யார்கிட்டயும் பேசித்தீர்க்காம ‘ கடிதம்’ எழுதி வச்சிட்டு ஓடிப்போயிட்டா.இதனால எங்கப்பா, எங்கே நானும் வேலை வெட்டியில்லாத ஒரு முட்டாள் பையனை காதலிச்சி அவன் பேச்சைக்கேட்டு எங்கக்கா மாதிரி ஓடிப்போயிடுவேனோன்னு தினமும் கண்கொத்தி பாம்பு மாதிரி என்னை […]