சினிமா செய்திகள்

ஈழத்து வலியில் கிட்டுவின் ‘சல்லியர்கள்’ சினிமா: உயிரோட்ட நடிப்பில் காமெடி கருணாஸ், ‘ரீல்ஸ்’ சத்யாதேவி!

‘இன்ஸ்டாகிராமில்’ ரீல்ஸ் போட்ட சத்யா தேவி, சமூக ஊடகத்திலிருந்து வெள்ளித்திரைக்குள் ஊடுருவி இருக்கிறார். படம்:“சல்லியர்கள்”. அறிமுகம். புது முகமா… சத்தியம் பண்ணினாலும் நம்பவே மறுப்பார்கள். நின்றால்… நடந்தால்… ஆண் டாக்டரின் கேள்விக்கு பதில் தந்தால் … சட்டென்று திரும்பிப் பார்க்கும் அந்தப் பார்வையில்- புகுந்து நம் இதயத்தில் உறைகிறார். (இதயத்தை கனமாக்கும் கதையில், உறக்கத்தை கெடுக்கிறார் என்னமாய் நடிப்பு…?!) சல்லியர்கள்: ஈழ வரலாற்றில் தைரியம் இரக்கம், நம்பிக்கையின் அடையாளமாகத் திகழ்ந்த போராளி மருத்துவர்கள். அவர்களுக்கு வீர வணக்கத்துடன் நடிகர் […]

Loading

செய்திகள்

நடிகர் ராஜேஷ் உடலுக்கு ரஜினிகாந்த் அஞ்சலி

சென்னை, மே 31– சென்னை ராமாபுரம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள நடிகர் ராஜேஷின் உடல் மீது மாலை வைத்து ரஜினிகாந்த் இன்று அஞ்சலி செலுத்தினார். பின்,ராஜேஷின் மகன், மகளுக்கு ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய ரஜினிகாந்த், “ராஜேஷ் மிகவும் எளிமையானவர். அவருக்கு நண்பர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். முதல்வர் ஸ்டாலின் முதல் இளையராஜா வரை பிரபலங்கள் வந்து அஞ்சலி செலுத்தினார்கள் என்றால் அவர் எப்படி வாழ்ந்தார் என்பதற்குச் சான்றுதான் இது. அவருக்கு தெரியாத விஷயங்களே கிடையாது. சினிமா, […]

Loading

சினிமா செய்திகள்

தமிழ் வில்லன் நடிகர் சம்பத்ராமுக்கு மலையாள சினிமாவில் விருது

சென்னை, மே 8– தமிழில் வளர்ந்து வரும் இளம் வில்லன் நடிகர் சம்பத்ராமுக்கு (வயது 54), மலையாளத்தில் சிறந்த வில்லன் நடிகருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. படங்களில் சின்னச்சின்ன கதாபாத்திரம் என்றாலும், முகமலர்ச்சியுடன் ஏற்று, சிரத்தையாக நடித்து, அனைவரின் பாராட்டுக்களைப் பெற்று வருபவர் இவர். தமிழ் சினிமாவில் 25 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து கொண்டிருப்பவர், பெரும்பாலும் வில்லன் வேடங்களில் நடித்து பாராட்டுக்களைப் பெற்று வருபவர். தற்போது தமிழ் மட்டுமன்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று பல மொழிகளில் மட்டுமல்ல […]

Loading

செய்திகள்

மதுரையில் 9 மணி நேரம் காத்திருந்து விஜய்யை வரவேற்ற தொண்டர்கள் !

மதுரை,மே.2- கொடைக்கானல் சினிமா படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த விஜய்யை சுமார் 9 மணி நேரம் காத்திருந்து ஏராளமான தொண்டர்கள், ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதற்கிடையே ரசிகர்கள் யாரும் எனது வாகனத்தை பின் தொடர வேண்டாம்,” என விஜய் கூறினர். அனால் விஜய்யின் வேண்டுகோளை நிராகரித்து, கொடைக்கானல் செல்லும் அவரது வாகனத்தை ரசிகர்கள் பின்தொடர்ந்து சென்றனர். தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய், 2026 சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு கட்சிப்பணிகளில் […]

Loading

செய்திகள்

‘சினிமா தயாரிப்பில் உலகளாவிய மையமாக இந்தியா வளர்ந்து வருகிறது”: பிரதமர் மோடி பெருமிதம்

மும்பையில் ‘வேவ்ஸ்’ மாநாடு: ரஜினி, ஏ.ஆர்.ரகுமான், மோகன்லால் பங்கேற்பு மும்பை, மே 1– ”சினிமா தயாரிப்பில் உலகளாவிய மையமாக இந்தியா வளர்ந்து வருகிறது” என ‘வேவ்ஸ்’ மாநாட்டில் பிரதமர் மோடி பெருமிதத்தோடு குறிப்பிட்டார். மும்பையில் முதலாவது உலக ஒலி-–ஒளி மற்றும் பொழுதுபோக்கு ‘வேவ்ஸ்’ உச்சி மாநாடு இது. மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மாநாட்டில் மத்திய மந்திரி எல்.முருகன், மகாராஷ்டிரா முதல்-மந்திரி பட்னாவிஸ், நடிகர்கள் நடிகர்கள் ரஜினிகாந்த், ஷாருக்கான், அமீர்கான், மோகன்லால், சிரஞ்சீவி, அக்சய்குமார், மிதுன் […]

Loading