சென்னை, ஆக. 28– நடிகை ரேகா நாயர் சென்ற கார் மோதி ஒருவர் பலியானார். பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ள ரேகா நாயர், 2022-ஆம் ஆண்டு பார்த்திபன் இயக்கிய இரவின் நிழல் படத்தில் நடித்துள்ளார். அந்த படத்தில் மேலாடை இல்லாமல் நடித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் சமூக வலைதளங்களில் பெண்கள் தொடர்பாக சில கருத்துக்களை அவர் தைரியமாக கூறி வந்தார். இந்த நிலையில் நடிகை ரேகா நாயருக்கு சொந்தமான கார் மோதி 55 வயது மதிக்கத்தக்க ஒருவர் […]