சிறுகதை

ஒரு எழுத்தாளர் தோசை சாப்பிட்டார்! – சிகாகோ சின்னஞ்சிறுகோபு

துணுக்கு எழுத்தாளர் குப்புசாமிக்கு ஒரே சந்தோஷம்! அவர் கடந்த தீபாவளி சமயத்தில் நிலவு என்ற பத்திரிகையில் ஒரு தோசை ஜோக் எழுதியிருந்தார்! சாப்பிட வந்தவர்: பேப்பர் தோசை ஏன் இவ்வளவு கனமாக, அடை மாதிரியிருக்கு? சர்வர்: இந்த பேப்பர் தோசை தீபாவளி ஸ்பெஷல் சார்! இதுதான் அந்த தோசை ஜோக்! இந்த ஜோக்கைப் படித்து, யார் சிரித்தார்களோ இல்லையோ, நம்ம எழுத்தாளர் குப்புசாமி அடிக்கடி படித்து சிரித்துக் கொண்டார்! கடந்த தீபாவளிக்கு வெளிவந்த இந்த தோசை ஜோக்கிற்கு […]

செய்திகள்

காணாமல் போன மணிப்பர்ஸ்! – சிகாகோ சின்னஞ்சிறுகோபு

எனக்கு சொந்த ஊர் மயிலாடுதுறை. நான் எனது இந்த 65 வது வயதில், ஒரு மாறுதலுக்களுக்காக வட அமெரிக்காவில் இருக்கும் இந்த சிகாகோ நகரில் பணி புரியும் எனது மகன் வீட்டில் வந்து ஓய்வாக தங்கியிருக்கிறேன். ஒரு வருடம் தங்கிவிட்டு அங்கேயிருந்து மயிலாடுதுறை திரும்பத் திட்டம். இங்கே கணினி ( PDF ) வழி யாக சில தமிழ் நாளிதழ்களை வாட்ஸ்-அப் குழுக்களின் மூலம், அமெரிக்காவிலிருந்தே ஸ்மார்ட்போன் மூலம் படிக்க முடிந்தாலும் அதில் என்னுடைய மயிலாடுதுறை மாவட்ட […]

சிறுகதை

நீல நிற வாழைப்பழம்! – சிகாகோ சின்னஞ்சிறுகோபு

எழுபத்தைந்து வயதைத் தாண்டிவிட்ட நீலமேகத்திற்கு அன்று காலையில் கண் விழித்தபோதே குழப்பமாக இருந்தது. நீலமேகம் கட்டிலில் இருந்தபடியே ஜன்னல் வழியாக பார்த்தபோது கண்ணுக்கு நீலவானம்தான் தெரிந்தது! ‘காலையில் செவ்வானம்தானே தெரிய வேண்டும், இதென்ன நீலவானமாக தெரியுதே’ என்று நினைத்தவருக்கு அப்போதுதான் தனது கட்டில் தெற்குப் பக்க ஜன்னல் ஓரமாக போடப்பட்டிருப்பது நினைவுக்கு வந்தது! ஐயா நீலமேகம் அந்த காலத்தில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர். ஓரளவு பெரிய பதவியில் நல்ல சம்பளத்தில் பணி […]

சிறுகதை

கார்த்திகைக்கும் பட்டாசு! – சிகாகோ சின்னஞ்சிறுகோபு

ராமநாதன் ஆறாவது படிக்கும் சிறுவன் என்பதும் அவனது ஊர் இந்த காலத்திலும் பஸ்கள் கூட வராத குக்கிராமம் என்பதும் நமக்கெல்லாம் தெரிந்த விஷயம்தான்! தீபாவளியெல்லாம் முடிந்து திருக்கார்த்திகை விழாவும் நெருங்கிக் கொண்டிருந்தது. அது மாலை நேரம். மழை வருவதுபோல அரையிருட்டாக இருந்தது. ராமநாதன் வீட்டு வாசலில் திண்ணையில் உட்கார்ந்திருந்தான். ‘தீபாவளிக்கே எல்லா வெடிகளையும் வெடித்து விட்டோமே, இந்த கார்த்திகைக்கு வெடிககள் எதுவும் மீதி வைக்கவில்லையே’ என்று கொஞ்சம் வருத்தத்துடன் அவன் உட்கார்ந்திருந்தான். அப்போது ஒரு பழைய சைக்கிளில் […]

சிறுகதை

பட்டாசும் அவசியம்தான்! – சிகாகோ சின்னஞ்சிறுகோபு

தீபாவளி நெருங்கி விட்டது. ஆறாவது படிக்கும் ராமநாதன் ஆயிரமாயிரம் பட்டாசு கனவுகளுடன் இருந்தான். அவன் கனவுகளில் கூட ராக்கெட் வெடிகள் பறந்தன. சரவெடிகள் வெடித்தன. புஸ்வாணங்கள் வண்ண ஜாலங்கள் நிகழ்த்தின! “அப்பா, தீபாவளிக்கு பட்டாசு வாங்க எப்போது போகப் போகிறோம்?” என்று கேட்டான். “பட்டாசா? தீபாவளி என்றால் பட்டாசு வெடித்து காசை கரியாக்கதான் வேண்டுமா? தீபாவளியில் எண்ணெய் தேய்த்துக் குளித்து, புத்தாடை உடுத்தி, தீபம் ஏற்றி கடவுளை வணங்கிவிட்டு, பலகார பட்சணங்களை சாப்பிட்டுவிட்டு உற்சாகமாக இருக்கலாமே! கொரோனா […]