முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு சென்னை, ஜூன் 22-– தென்காசி சாலை விபத்தில் தாயை பறிகொடுத்த சிறுவன் பெயரில் ரூ.5 லட்சம் வைப்பு நிதியும், மாதாந்திர உதவித்தொகையும் அறிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–- தென்காசி மாவட்டம், செங்கோட்டை வட்டம், இலத்தூர் விலக்கு அருகில் கடந்த 13.6.2024 அன்று பிற்பகல் 3.30 மணியளவில் தென்காசியிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கிச் சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்தும், கொல்லத்திலிருந்து திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலை நோக்கி வந்துகொண்டிருந்த லாரியும் […]