செய்திகள்

ஸ்டாலின் புலம்புகிறார்; விரக்தியின் விளிம்பில் இருக்கிறார்: எடப்பாடி பழனிசாமி பேச்சு

அம்மா அரசின் சாதனைகள், திட்டங்களை கண்டு பொறுத்து கொள்ள முடியவில்லை ஸ்டாலின் புலம்புகிறார்; விரக்தியின் விளிம்பில் இருக்கிறார்: எடப்பாடி பழனிசாமி பேச்சு பட்டாசு தொழிலுக்கு துணைநிற்போம் என உறுதி சிவகாசி, மார்ச் 27– அம்மா அரசின் சாதனைகள், திட்டங்களை கண்டு ஸ்டாலினால் பொறுத்து கொள்ள முடியவில்லை. எனவே அவர் புலம்புகிறார். விரக்தியின் விளிம்பிற்கு சென்று விட்டார் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று விருதுநகர் மாவட்டம், சிவகாசி சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற […]

செய்திகள்

விருதுநகர் மாவட்டத்தில் தேர்தல் களத்தில் இறங்கிய திமுக எம்.எல்.ஏ.க்கள்

விருதுநகர், மார்ச்.13– விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 7 சட்டப் பேரவைத் தொகுதிகளில் தற்போது எம்.எல்.ஏ.க்களாக உள்ள திருச்சுழி தங்கம் தென்னரசு, அருப்புக்கோட்டை சாத்தூர் ராமச்சந்திரன், விருதுநகர் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன், ராஜபாளையம் தங்கப்பாண்டியன் ஆகியோர் திமுக சார்பில் மீண் டும் போட்டியிடுகின்றனர். இவர்களில், கட்சியினர் மத்தியில் மட்டுமின்றி பொதுமக்களிடமும் செல்வாக்குப் பெற்றவர் தங்கம்தென்னரசு. இவரது தந்தை தங்கப்பாண்டியன் அமைச்சராகப் பொறுப்பு வகித்தது முதல், பாரம்பரியமான இக்குடும்பத்தினர் மீது மக்களுக்கான மதிப்பும் இன்றளவும் குறையாமல் உள்ளது. கடந்தமுறை போன்று அதிமுக […]

செய்திகள் வாழ்வியல்

திருமண தோஷத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவி அருளும் சாத்தூர் விஸ்வநாதர் கோவில்

அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோவில், சாத்தூர், விருதுநகர் மாவட்டம். இந்த திருக்கோவில் விருதுநகருக்கு அருகிலுள்ள சாத்தூர் என்ற ஊரிலே பிரபலமான ஒரு திருக்கோயிலாகும். 500 வருட பழமை வாய்ந்த இந்த திருத்தலத்தில் பல்லாண்டுகளுக்கு முன் இவ்விடத்தில் ஒரு விநாயகர் கோவில் இருந்தது என்றும் பிற்காலத்தில் பக்தர்கள் இங்கு விஸ்வநாதர் விசாலாட்சி மற்றும் பத்திரகாளி அம்மனுக்கு சிலை வடித்து கோயில் எழுப்பினர் என்றும் கூறுகின்றனர். இத்திருந்தல விருட்சமாக ருத்ராட்ச மரம் உள்ளது. ராஜகோபுரத்திற்கு இருபுறமும் சூரியன் சந்திரன் இருவரும் ஏழு […]

செய்திகள்

முயல் வேட்டையை அனுமதிக்க முடியாது: அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தகவல்

சென்னை, பிப்.26– முயல் வேட்டையை அனுமதிக்க முடியாது என்று சட்டசபையில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் திட்டவட்டமாக கூறினார். சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தின் போது, மதுரை மாவட்டம் மேலூர் தொகுதி மக்கள் திருவிழா காலத்தின் போது முயல்களை வேட்டையாடி சாமி கும்பிட்டு வந்ததாகவும், ஆனால் தற்போது கட்டுப்பாடு காரணமாக் வேட்டையாடுவதில்லை எனவும், கருவை காடுகளில் உள்ள முயல் வேட்டை நடத்துவதற்கு அனுமதி அளித்து, வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தில் இருந்து முயல்களுக்கு விலக்களிக்க வேண்டும் என்று மேலூர் சட்டமன்ற […]

வர்த்தகம்

சாத்தூர் பட்டாசு ஆலை விபத்தில் பெற்றோரை இழந்த சிறுமி நந்தினி: அனைத்து கல்விக்கட்டணம் எஸ்.ஆர்.எம். நிறுவனர் பாரிவேந்தர் எம்.பி. ஏற்றார்

சென்னை, பிப். 17– சாத்தூர் பட்டாசு ஆலை விபத்தில் பெற்றோரை இழந்து தவிக்கும் சிறுமி நந்தியின் கல்விக்கட்டணம் முழுவதையும் எஸ்.ஆர்.எம். கல்விக்குழுமம் ஏற்றுக்கொள்ளும் என்று நிறுவனர் பாரிவேந்தர் எம்.பி. தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே அச்சங்குளம் கிராமத்தில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் மரணமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக இந்த பட்டாசு ஆலை விபத்தில் பலியான எத்திராஜ் – செல்வி தம்பதியரின் மகள் நளினி என்ற சிறுமியின் அழுகையும், […]

செய்திகள்

சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து: உரிமையாளர் உள்பட 6 பேர் மீது வழக்குப் பதிவு

விருதுநகர், பிப்.13– சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக பட்டாசு ஆலையின் உரிமையாளர் உள்பட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது. விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே அச்சங்குளம் கிராமத்தில் நேற்று பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் ஆலையில் உள்ள 60 அறைகளில் 15 அறைகள் முற்றிலும் இடிந்து தரைமட்டமானது. மேலும் 13 அறைகள் பலத்த சேதம் அடைந்து தீப்பற்றி எரிந்தன. […]