“தள்ளி போப்பா..இங்க நிற்கக்கூடாது”! “இந்தாப்பா 307… எல்லாத்துக்கும் நான் வரனுமா..இந்த கிழவனை நீயே போகச் சொல்லக்கூடாதா” இன்ஸ்பெக்டர் கோபத்தில் கத்தினார். “நான் பல தடவை விரட்டிவிட்டேன் ஐயா. போவது போல போக்கு காட்டிவிட்டு மறுபடியும் வந்துவிடுகிறார் ” உதவியாளர் பரிதாபமாக சொன்னார். “நீ டூட்டி பார்க்கிற லட்ச்சனம் இதான் ” ஏதோ நினைத்துக்கொண்டவராக அந்த கிழவரை அழைத்தார். ” பெரியவரே! எதற்கு போலீஸ் ஸ்டேஷன் வாசலில் நிக்கறீங்க. எதாவது புகார் செய்யனுமா. அப்படி இருந்தாலும் நாளைக்கு வாங்க” […]