நல்வாழ்வுச் சிந்தனைகள் சதகுப்பை விதையை கொதிக்க வைத்து சர்க்கரை சேர்த்து வடிகட்டி கொடுப்பதால் குழந்தைகளுக்கு ஜீரண சக்தியை தூண்டும். இரத்த சோகை குறைய சதகுப்பை விதைகளை பொடி செய்து கொத்தமல்லி இலைச்சாறில் கலந்து குடித்து வந்தால் இரத்த சோகை குறையும். மேலும் பெண்கள் மாதவிடாய் நேரத்தில் இதை குடித்து வந்தால் ரத்தம் விருத்தியடையும். உடல் பலம் பெறும். சதகுப்பை இலைகளை உலர்த்தி காய வைத்து பொடி செய்து அந்த பொடியை நீரில் கலந்து அருந்தினால் கபம் குறையும். […]