சென்னை, அக். 5– ‘‘வள்ளலார் காட்டிய சமரச சுத்த வழியை எந்நாளும் பின்பற்றுவோம்…’’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வள்ளலாரின் 202வது பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில் கூறியிருப்பதாவது:– ‘‘நமது அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற ஆண்டுமுதலாக, “தனிப்பெருங்கருணை நாள்” எனக் கொண்டாடி வரும் அருட்பிரகாச வள்ளலாரின் பிறந்தநாள் இன்று! “உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்!” “மதமான பேய் பிடியாதிருக்கவேண்டும்!” என அவர் காட்டிய சமரச சுத்த வழியை எந்நாளும் […]