பாட்னாவில் நடந்த சபாநாயகர்கள் மாநாட்டில் அப்பாவு பேச்சு சென்னை, ஜன.21-– தமிழக கவர்னர் அரசியலமைப்பு சட்டவிதிகளை கேலிக்கூத்தாக்கி வருகிறார் என்று பீகார் மாநிலத்தில் நடைபெற்ற மாநாட்டில் சபாநாயகர் அப்பாவு பேசினார். பீகார் மாநிலம் பாட்னாவில் அகில இந்திய சட்டமன்ற பேரவை தலைவர்கள் மாநாடு, அரசமைப்பு சட்டத்தின் 75-வது ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் தமிழக சபாநாயகர் அப்பாவு, துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி ஆகியோர் கலந்து கொண்டனர். மாநாட்டில் சபாநாயகர் அப்பாவு பேசியதாவது:-– இந்தியாவின் ஒரு குக்கிராமத்தில் […]