சபரிமலை, நவ. 18– சபரிமலை ஐயப்பன் கோவிலில் முதியோர் மற்றும் குழந்தைகள் விரைவாகவும், சிரமமின்றியும் தரிசனம் செய்யும் வகையில் தனிப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவில் இந்த ஆண்டு மண்டல கால பூஜைக்காக கடந்த 15ம் தேதி நடை திறக்கப்பட்டது. ஆன்லைன் மூலம் அதிகபட்சமாக 70 ஆயிரம் பேரும், உடனடி தரிசனம் மூலம் 10 ஆயிரம் பேரும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். 18ம் படி வழியே நிமிடத்துக்கு 80 பக்தர்கள் ஏறிச் செல்கின்றனர். படிகளில் பக்தர்கள் பாதுகாப்பாக ஏறவும், […]