சென்னை, ஜூன் 29–- மாணவர்களின் நலன் கருதி இந்தியா முழுவதும் ‘நீட்’ தேர்வை கைவிட சட்ட திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என பிரதமர் மோடியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். மருத்துவம் பயில விரும்பும் மாணவர்களின் நலன் கருதி தேசிய அளவில் நீட் தேர்வை ரத்து செய்திட வலியுறுத்தி நேற்று (28–ந் தேதி) சட்டமன்றப் பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முதலமைச்சர் ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு இத்தீர்மானத்தை இணைத்து இது தொடர்பாக கடிதம் ஒன்றை […]