செய்திகள்

தமிழகத்தில் வயது வாரியாக மொத்த வாக்காளர் விவரங்கள்

சென்னை, ஏப். 2– தமிழகத்தில் வாக்களிக்க உள்ள, வயது வாரியான வாக்காளர்களின் எண்ணிக்கையில் 30 முதல் 39 வயது வரையிலான எண்ணிக்கையே அதிகமாக உள்ளது. தமிழகத்தில் இன்னும் மூன்று நாட்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், அனைத்துக் கட்சியினரும் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க மறுபுறம் தேர்தல் ஆணையம் பரிசு பொருள்கள், ஆவணமின்றி எடுத்து செல்லப்படும் பணம் போன்றவற்றை பறிமுதல் செய்து வருகின்றன. மேலும், சட்டமன்ற தேர்தலில் எந்தவித அசம்பாவிதமும் நடக்காமல் […]

செய்திகள்

தமிழக தேர்தல்: இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை, ஏப். 1– சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இன்று முதல் 5 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. தமிழகத்தில் ஏப்ரல் 6 ந் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், மக்கள் தங்களது சொந்த ஊருக்கு சென்று வாக்களிக்கும் வண்ணம், தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு பேருந்துகள், இன்று முதல் 5 நாட்களுக்கு இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் இருந்து மட்டும், இந்த ஐந்து […]

செய்திகள்

தேர்தல் களத்தில் 4 அணிகள்

சென்னை, மார்ச் 10– நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அண்ணா தி.மு.க., தி.மு.க., மக்கள் நீதி மய்யம் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகள் தலைமையில் மொத்தம் 4 அணிகள் களத்தில் உள்ளன. நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. அந்த கட்சி அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுவிட்டது. அண்ணா தி.மு.க.விலிருந்து தே.மு.தி.க. விலகியதால், தனித்து போட்டியிடுகிறதா அல்லது வேறு யாருடன் கூட்டணி சேருகிறதா? என்பது இன்னமும் தெரியவில்லை. தற்போதைய சூழ்நிலையில், நேற்று […]

செய்திகள்

உரிமம் பெற்ற 600 துப்பாக்கிகள் போலீசில் இதுவரை ஒப்படைப்பு

சென்னை, மார்ச் 3– சென்னையில் இதுவரை உரிமம் பெற்ற 600 துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், உரிமம் பெற்று துப்பாக்கிகள் வைத்துள்ளவர்கள், அதை அவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள காவல் நிலையங்களில் ஒப்படைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6ந்தேதி சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு பிப்ரவரி 26ந்தேதி மாலை அறிவிக்கப்பட்டது. அன்றுமுதல் தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்துள்ளன. […]

செய்திகள்

தமிழக தேர்தல் பணி: துணை ராணுவத்தினர் தமிழகம் வருகை

சென்னை, மார்ச்.1- தமிழக தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்காக துணை ராணுவத்தினர் தமிழகம் வந்துள்ளனர். தமிழகத்தில் ஏப்ரல் மாதம் 6-ந் தேதி சட்டமன்ற தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து தமிழகத்தில் தேர்தல் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தேர்தல் நேரத்தில் பாதுகாப்பு பணிக்காகவும் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தேர்தல் பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் நேற்று முன்தினம் (சனிக்கிழமை) நள்ளிரவு […]

செய்திகள்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு 2 இணை தேர்தல் அதிகாரிகள் நியமனம்

சென்னை, பிப்.18– தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலையொட்டி இரு இணை தலைமைத் தேர்தல் அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வேளாண்துறை இணைச் செயலாளராக இருந்த ஆனந்த், சுகாதாரத்துறை இணைச் செயலாளராக இருந்த அஜய் யாதவ் ஆகியோர் இணை தலைமை தேர்தல் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சட்டமன்ற தேர்தல் பணிகளை கவனமாக கண்காணிப்பதற்காக இரு இணை தலைமைத் தேர்தல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கடந்த வாரம் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் தலைமையில் தமிழகம் வந்திருந்த தேர்தல் ஆணையக் குழு, […]

செய்திகள்

சட்டமன்ற தேர்தலில் ரஜினி ஆதரவு யாருக்கும் இல்லை

சென்னை, பிப். 6– வரும் சட்டமன்ற தேர்தலில் ரஜினி ஆதரவு யாருக்கும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் தனது உடல்நிலையைக் காரணம் காட்டி அரசியலுக்கு வரப்போவதில்லை என்று திட்டவட்டமாகக் கூறிவிட்ட நிலையில், அரசியலில் ஆர்வம் கொண்ட ரஜினி மக்கள் மன்றத்தினர் தொடர்ந்து வேறு கட்சிகளில் தங்களை இணைத்துக்கொள்ளத் தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ளவர்கள் ஏதேனும் அரசியல் கட்சியில் இணைந்து செயல்பட விரும்பினால், ரஜினி மக்கள் மன்றத்திலிருந்து ராஜினாமா செய்து விட்டு அவர்கள் […]