செய்திகள்

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை விசாரிக்க 7 சிறப்பு நீதிமன்றங்கள்

சட்டசபையில் ஸ்டாலின் அறிவிப்பு இந்த ஆண்டு 3 ஆயிரம் புதிய பஸ்கள் வாங்கப்படும் ‘தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக்குவேன்’ சென்னை, ஜன.11– பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை விசாரிக்க 7 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று சட்டசபையில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அறிவித்தார். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று பதிலளித்தார். அப்போது எதிர்க்கட்சிகள் அளித்த புகார்கள், குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்தார். உறுப்பினர்களின் கோரிக்கைகளுக்கும் பதிலளித்து பேசினார். […]

Loading

செய்திகள்

பொள்ளாச்சி விவகாரத்தில் தாமதமாக வழக்குப்பதிவு: முதலமைச்சர் சொன்னதே உண்மை

சபாநாயகர் தீர்ப்பு சென்னை, ஜன. 11– பொள்ளாச்சி விவகாரத்தில் தாமதமாக வழக்குபதிவு செய்யப்பட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொன்னது உண்மை என சட்டசபையில் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். நேற்று நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில் பொள்ளாச்சி சம்பவத்தில் 24 மணி நேரத்தில் வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார். இதற்கு மறுப்பு தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியிருந்தார். இதனால் சபாநாயகர் அப்பாவு இருதரப்பும் ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு தெரிவித்து இருந்தார். இதனால் சபாநாயகர் அப்பாவு உத்தரவை […]

Loading

செய்திகள்

மகளிர் உரிமைத் தொகை: புதிதாக விண்ணப்பம் செய்பவர்களுக்கு 3 மாதங்களில் வழங்கப்படும்

சட்டசபையில் அமைச்சர் உதயநிதி உறுதி சென்னை, ஜன. 8– மகளிர் உரிமைத் தொகை பெற புதிதாக விண்ணப்பம் செய்தால், தகுதியுள்ளவர்களுக்கு 3 மாதங்களில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது கலைஞர் மகளிர் உரிமைத் தொகை குறித்து உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் பதிலளித்தார். அப்போது அவர் பேசியதாவது:– பெண்களின் வாழ்க்கை தரம் மேம்படவும், […]

Loading

செய்திகள்

11–ந்தேதி வரை சட்டசபை கூட்டத்தொடர்: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

சென்னை, ஜன.6– ஜனவரி 11–ந்தேதி வரை சட்டசபை கூட்டத்தொடர் நடக்கும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். சென்னை தலைமை செயலகத்தில் நிருபர்கள் சந்திப்பில், அப்பாவு கூறியதாவது: இன்று சட்டசபை அலுவல் ஆய்வுக்குழு கூடி கூட்டத்தொடர் பற்றி முடிவெடுக்கப்பட்டுள்ளது. மன்மோகன் சிங், ஈவிகேஎஸ் இளங்கோவன் உள்ளிட்டோர் மறைவுக்கு சட்டசபையில் நாளை (7–ந்தேதி) இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அவை ஒத்திவைக்கப்படும். அடுத்து 4 நாள்கள், அதாவது ஜனவரி 11–ந்தேதி வரை தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறும். கவர்னர் உரை மீதான […]

Loading

செய்திகள்

அச்சிடப்பட்ட கவர்னர் உரை மட்டுமே அவைக் குறிப்பில் இடம்பெறும்: சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்

அரசியல் சாசனத்திற்கு விரோதமாக கவர்னர் செயல்படுகிறார்: அமைச்சர் துரைமுருகன் குற்றச்சாட்டு சென்னை, ஜன.6– அச்சிடப்பட்ட கவர்னர் உரையில் இடம்பெற்றது மட்டுமே அவைக் குறிப்பில் இடம்பெறும் என அவை முன்னவர் துரைமுருகன் கொண்டுவந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழக சட்டசபை கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கியதும், கவர்னர் உரையை வாசிக்காமலேயே அவையிலிருந்து வெளியேறினார். இதைத் தொடர்ந்து கவர்னர் உரையை சபாநாயகர் அப்பாவு தமிழில் வாசித்து முடித்தார். இந்த நிலையில் அச்சிடப்பட்ட கவர்னர் உரை மட்டுமே அவைக் குறிப்பில் இடம்பெறும் […]

Loading

செய்திகள்

உரையை வாசிக்காமல் சட்டசபையிலிருந்து கவர்னர் ஆர்.என்.ரவி வெளியேறினார்

புறக்கணிப்பு ஏன்? கவர்னர் மாளிகை விளக்கம் சென்னை, ஜன.6 தமிழக சட்டசபையில் உரையை வாசிக்காமல் கவர்னர் ஆர்.என்.ரவி வெளியேறினார். இது குறித்து கவர்னர் மாளிகை வெளியிட்ட விளக்கத்தில், “அரசமைப்புக்கும், தேசிய கீதத்துக்கும் அப்பட்டமான அவமரியாதை செய்பவர்களுடன் துணை நிற்கக்கூடாது என்பதால் கவர்னர் வருத்தத்துடன் அவையில் இருந்து வெளியேறினார்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டசபையில் புத்தாண்டின் முதல் கூட்டம் இன்று கவர்னர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று காலை 9.30 […]

Loading

செய்திகள்

சட்டசபையில் இன்று புதிய திட்டப்பணிகளுக்காக ரூ.3534 கோடி நிதி ஒதுக்கீடு

முதல்‌ துணை மதிப்பீடு நிறைவேற்றம் சென்னை, டிச.9– நடப்பு 2024–-25–ம்‌ ஆண்டுக்கு புதிய திட்டப்பணிகளை நிறைவேற்றுவதற்காக ரூ.3534 கோடியே 5 லட்சம் நிதியை ஒதுக்கீடு செய்ய வகை செய்யும் முதல்‌ துணை மதிப்பீடு மானியம் வழங்கக் கோரும் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு சட்டசபையில் 2 நாள் கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. தமிழ்நாடு அரசின்‌ நிதி மற்றும்‌ சுற்றுச்சூழல்‌ மற்றும்‌ காலநிலை மாற்றத்‌ துறை அமைச்சர்‌ தங்கம்‌ தென்னரசு […]

Loading

செய்திகள்

டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிரான தனித் தீர்மானம்: சட்டசபையில் நிறைவேற்றம்

நான் முதல்வராக இருக்கும் வரை அனுமதிக்க மாட்டோன்: ஸ்டாலின் உறுதி சென்னை, டிச.9– மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் நாயக்கர்பட்டி கிராமத்தில் இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை உடனடியாக ரத்து செய்திடவும், மாநில அரசின் அனுமதியின்றி எந்த சுரங்க உரிமத்தையும் வழங்கக்கூடாது என்று மத்திய அரசை வலியுறுத்தியும் தமிழக சட்டசபையில் கொண்டு வரப்பட்ட தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. மதுரை மாவட்டம் அரிட்டாப்பட்டியில் இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரிமையை […]

Loading

செய்திகள்

உதயநிதி ஸ்டாலினுக்கு சட்டசபையில் 3–வது இருக்கை

சென்னை, டிச.9– துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சட்டசபையில் முதல் வரிசையில் 3வது இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின், அவை முன்னவர் துரைமுருகனுக்கு அடுத்தப்படியாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு 3–வது இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. முன்னதாக திருவல்லிக்கேணி–சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ.வாக வெற்றிபெற்று சட்டசபைக்கு வந்த உதயநிதிக்கு, 3-வது வரிசையில் இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. அதன்பின்னர், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றபோது, அவருக்கு முதல் வரிசையில் 10வது இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், துணை […]

Loading

செய்திகள்

தமிழகத்தில் 11,509 மின்மாற்றிகள் மாற்றப்பட்டுள்ளன: சட்டசபையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

சென்னை, டிச. 9– தமிழகத்தில் 11,609 மின்மாற்றிகள் மாற்றப்பட்டுள்ள என்று சட்டசபையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் கேள்விக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, “சென்னையில் 7 மின் கோட்டங்களில் மட்டுமே இன்னும் மேல்நிலை மின்சாரக் கம்பி வடங்கள் இருக்கின்றன. இவற்றை புதைவிட கம்பிகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதில் அம்பத்தூர் தொகுதியும் உள்ளது. விரைவில் பணிகள் முடிக்கப்படும் என்றார். தொடர்ந்து 150 மின் […]

Loading