செய்திகள்

வனத்துறை தேர்வில் ஆள்மாறாட்டம்: கோவையில் 8 வடமாநிலத்தவர் கைது

கோவை, மார்ச் 11– வனத்துறை தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வடமாநிலத்தைச் சேர்ந்த 8 பேரை கோவை போலீசார் கைது செய்துள்ளனர். கோவை, மேட்டுப்பாளையம் சாலையில் மத்திய அரசின் வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனமானது ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்குகிறது. இங்கு வனத் துறையினருக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இந்த நிறுவனத்தில் எம்.டி.எஸ். துறையில் டெக்னீசியன், டெக்னிக்கல் உதவியாளர் பணிக்கு காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டது. இந்த […]

Loading

செய்திகள்

கோவை மத்திய சிறையில் போக்சோ கைதி உயிரிழப்பு

கோவை, மார்ச் 10– கோவை மத்திய சிறையில் போக்சோ கைதி உயிரிழந்தார். ரத்தினபுரியில் உள்ள ஆறுமுக கவுண்டர் வீதியைச் சேர்ந்தவர் செந்தில் (38). இவர், கடந்த 2022ம் ஆண்டு கோவை அனைத்து மகளிர் கிழக்குப் பிரிவு போலீஸாரால், போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கில் தண்டனை பெற்று கோவை மத்திய சிறையின், 7-வது பிளாக்கில் செந்தில் அடைக்கப்பட்டிருந்தார். சர்க்கரை நோயால் அவதிப்பட்டு அதற்குரிய மருந்துகளும் எடுத்து வந்துள்ளார். இந்நிலையி்ல், கடந்த 7ம் தேதி இரவு செந்தில் தனது […]

Loading

செய்திகள்

கோவை அண்ணா தி.மு.க. எம்.எல்.ஏ. வீட்டில் லஞ்ச ஒழிப்புப் போலீசார் சோதனை

கோவை, பிப். 25- வருமானத்துக்கு அதிகமாக ரூ.2.75 கோடி சொத்து குவித்ததாக கோவை அண்ணா தி.மு.க. எம்.எல்.ஏ. அம்மன் அர்ச்சுனன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். கோவை மாநகர மாவட்ட அண்ணா தி.மு.க. செயலாளராக இருப்பவர் அம்மன் கே.அர்ச்சுனன். கடந்த 2021 தேர்தலில் போட்டியிட்டு வென்ற இவர் கோவை வடக்கு தொகுதி அண்ணா தி.மு.க. எம்.எல்.ஏ.வாக உள்ளார். இதற்கு முன்பு 2016–21 காலகட்டத்தில் கோவை தெற்கு தொகுதி அண்ணா […]

Loading

செய்திகள்

உணவு தேடி ஊருக்குள் வந்த ஒற்றை யானையால் பதட்டம்

கோவை, பிப். 21– கோவை சுற்றுவட்டார கிராமப் பகுதியில் ஒற்றை யானை ஒன்று விவசாயி ஒருவரின் வீட்டை நோட்டமிட்டதால் பொதுமக்களிடம் பதட்டம் அதிகரித்துள்ளது. கோவை மாவட்ட சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில மாதங்களாக வேட்டையன் என்ற ஒற்றை யானை சுற்றி வருகிறது. இந்த யானை இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு தோட்டத்து கேட்டை மூடச் சென்ற விவசாயி வேலுமணி என்பவரை தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வீட்டை நோட்டமிட்ட யானை இதனைத் தொடர்ந்து பொள்ளாச்சி டாப்ஸ்லிப் […]

Loading

செய்திகள்

திருமண செயலி மூலம் மோசடி: கோவையில் இளம் பெண் கைது

கோவை, டிச. 11– திருமண செயலி மூலம் அறிமுகமாகி கோவை விவசாயிடம் ரூ. 7 லட்சத்தை பறித்துக் கொண்டு தப்பி ஓடிய இளம் பெண்ணை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த விவசாயி ஒருவர், தனக்கு வரன் தேடி ஆன் லைன் செயலிகள் மூலம் பதிவு செய்திருந்தார். அப்போது அவருக்கு பிரியா என்ற பெண் பழக்கமாகி உள்ளார். இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்வதாக முடிவு செய்து இருந்த நிலையில், பிரியா […]

Loading

செய்திகள்

கோவையில் தங்க நகை தொழில் பூங்கா: டெண்டர் கோரியது தமிழக அரசு

சென்னை, டிச. 5– கோவையில் தங்க நகை தொழில் பூங்கா அமைக்க தமிழக அரசு டெண்டர் கோரியுள்ளது. கோவை மாநகரில் 40 ஆயிரம் நகை பட்டறைகள் உள்ளன. இதனை நம்பி 1 லட்சத்து 50 ஆயிரம் தொழிலாளர்கள் உள்ளனர். தங்க நகை தொழில் வளர்ச்சிக்காக தொழிற்பேட்டை அமைக்க வேண்டும் என்று நகை உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் சங்க அமைப்பினர் வலியுறுத்தி வந்தனர். இதற்கிடையில் கடந்த நவம்பர் மாதம் கோவைக்கு கள ஆய்வுக்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நகை […]

Loading

செய்திகள்

4 நாள் பயணமாக தமிழகம் வந்தார் ஜனாதிபதி திரவுபதி முர்மு

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவையிலிருந்து கார் மூலம் ஊட்டி சென்றார் ஊட்டி, நவ. 27– 4 நாள் அரசு முறைப் பயணமாக புதுடெல்லியிலிருந்து கோவை வந்த ஜனாதிபதி திரௌபதி முர்மு, அங்கிருந்து கார் மூலம் ஊட்டி சென்றார். ஜனாதிபதி திரெளபதி முர்மு இன்று முதல் நவம்பர் 30ஆம் தேதி வரை 4 நாட்கள் தமிழகத்தில் தங்கியிருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதற்காக 4 நாள்கள் அரசு முறைப் பயணமாக இன்று நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளார். இதையொட்டி […]

Loading

செய்திகள்

பொள்ளாச்சியில் இருந்து கோவை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து தீப்பிடித்து எரிந்து சேதம்

கோவை, அக். 24– பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு பயணிகளுடன் சென்ற அரசு பேருந்து ஒத்தக்கால் மண்டபம் அருகே திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து கோவை நோக்கி அரசுப்பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. பேருந்தை ஓட்டுநர் பொள்ளாச்சியை சேர்ந்த சுரேஷ் என்பவர் ஓட்டி வந்தார்.நடத்துநராக பொள்ளாச்சியை சேர்ந்த கதிரேசன் என்பவர் பணியில் இருந்தார். இப்பேருந்தில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இப்பேருந்து காலை 8 மணியளவில் மயிலேறிபாளையத்தை கடந்து ஒத்தகால் மண்டபம் […]

Loading

செய்திகள்

கோவை உக்கடம் குளத்தில் சோலார் பேனல்களை மிதக்கவிட்டு மின் உற்பத்தி

தினமும் 154 கிலோ வாட் மின்சாரம் கிடைக்கும் கோவை, அக்.18-– தமிழகத்திலேயே முதல்முறையாக கோவையில் உள்ள உக்கடம் குளத்தில் சோலார் பேனல்களை மிதக்கவிட்டு மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இதன் மூலம் தினமும் 154 கிலோ வாட் மின்சாரம் கிடைக்கும். கோவை மாநகராட்சி சார்பில் உக்கடம் பெரியகுளத்தில் சோலார் பேனல்களை (சூரியஒளி மின்தகடு) மிதக்கவிட்டு, அதன் மூலம் மின்சாரம் தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. அதற்காக நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ஜெர்மன் நாட்டு நிறுவனத்துடன் சேர்ந்து சோலார் மூலம் மின்சாரம் […]

Loading

செய்திகள்

ஈஷா மையத்தில் இன்று 2வது நாளாக விசாரணை

கோவை, அக். 2– கோவை ஈஷா மையத்தில் இன்றும் 2வது நாளாக காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை, வடவள்ளி பகுதியை சேர்ந்த காமராஜ் என்பவர் கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் அமைந்து உள்ள ஈஷா யோகா மையத்தில் தங்கி உள்ள தனது இரு மகள்களை மீட்டுத் தர கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு மீதான விசாரணையில், ஈஷா மீதான வழக்குகள், வழக்குகளின் விவரம், மகள்கள் கட்டாயத்தின் பேரில் யோகா […]

Loading