செய்திகள்

கோவிஷீல்டு போட்ட இந்தியர்கள்: இங்கிலாந்த் தனிமைப்படுத்தல் இன்றி அனுமதி

லண்டன், அக்.8- கோவிஷீல்டு தடுப்பூசி போட்ட இந்தியர்களுக்கு தனிமைப்படுத்தல் இல்லை என இங்கிலாந்து அறிவித்து உள்ளது. இங்கிலாந்து அரசு, இந்தியாவின் கோவிஷீல்டு தடுப்பூசியை சமீபத்தில் அங்கீகரித்தது. எனினும் இந்த தடுப்பூசி போட்ட இந்தியர்கள் இங்கிலாந்து சென்றால் 10 நாள் தனிமை கட்டாயம் என்பது தொடரும் என அறிவித்து இருந்தது. இது இந்தியாவுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இங்கிலாந்தின் இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக, அந்த நாட்டில் இருந்து இந்தியா வருவோருக்கு 10 நாள் தனிமை கட்டாயம் என மத்திய […]

செய்திகள்

2 தடுப்பூசிகளை கலந்து செலுத்துவதற்கான ஆய்வு: வேலூர் சி.எம்.சி.க்கு அனுமதி

புதுடெல்லி, ஆக. 11– கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகளை கலந்து செலுத்துவதற்கான ஆய்வுக்கு வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு இந்திய மருந்து தர கட்டுப்பாடு ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது. கொரோனா வைரசுக்கு எதிரான பெரும்பாலான தடுப்பூசிகள் 2 தவணைகள் செலுத்த வேண்டிய தடுப்பூசிகளாகவே இருக்கின்றன. ஒரு தடுப்பூசியை முதல் தவணை செலுத்தி, குறிப்பிட்ட இடைவெளிக்கு பின்னர் அதே தடுப்பூசியை 2-வது தவணை செலுத்திக்கொள்ள வேண்டும். இந்தியாவில் தற்போது கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய இரு தடுப்பூசிகளும் இதே […]

செய்திகள்

கொரோனாவிலிருந்து 93% பாதுகாபளிக்கும் கோவிஷீல்டு

புதுடெல்லி, ஜூலை 28- கோவிஷீல்டு தடுப்பூசி கொரோனாவிலிருந்து 93 சதவீதம் பாதுகாப்பளிப்பதாகவும் 98 சதவீதம் இறப்பினை குறைப்பதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனமும் கூட்டாக உருவாக்கிய கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் புனே நகரில் உள்ள இந்திய சீரம் நிறுவனம், கோவிஷீல்டு என்ற பெயரில் தயாரித்து வினியோகிக்கிறது. இந்த தடுப்பூசி கொரோனா வைரசுக்கு எதிராக 93 சதவீதம் பாதுகாப்பளிப்பதாகவும் 98 சதவீதம் இறப்பினை குறைப்பதாகவும் ஆயுதப்படைகள் மருத்துவ கல்லூரி நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. […]

செய்திகள்

டெல்டா வைரசுக்கு எதிராக கோவிஷீல்டு தடுப்பூசி 94% பயன்

ஹமிர்பூர், ஜூலை.19- டெல்டா வைரசுக்கு எதிராக கோவிஷீல்டு தடுப்பூசி 94 சதவீதம் பயனுள்ளது என்று இங்கிலாந்து கண்டறிந்துள்ளது. கொரோனா வைரஸ் மாறுபாடுகளில் டெல்டா வைரஸ் கவலைக்குரிய ஒன்றாக கருதப்படுகிறது. இது மிக அதிவேகமாக பரவுகிறது. இந்தியாவில் முதன் முதலாக காணப்பட்ட இந்த வைரஸ் தற்போது உலகின் 110 நாடுகளுக்கு மேலாக பரவி விட்டது. இன்னும் அதிக பரவல், கூடுதலான உயிரிழப்பு ஆபத்துக்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. எதிர்காலத்தில் இந்த வைரஸ் ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்ப்பதாக உலக சுகாதார […]

செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு 16 ஐரோப்பிய நாடுகள் அனுமதி

புதுடெல்லி, ஜூலை 19– கோவிஷீல்டு தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்களுக்கு 16 ஐரோப்பிய நாடுகள் அனுமதி அளித்துள்ளன என்று சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனா வாலா தெரிவித்துள்ளார். ஐரோப்பிய நாடுகளில் மக்கள் எளிதாக பயணம் மேற்கொள்ள கிரீன் பாஸ் என்ற நடைமுறை செயல்படுத்தப்படுகிறது. கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் அதற்கான கிரீன் பாஸ் சான்றிதழுடன் ஸ்பெயின் நாட்டில் இருந்து பிரான்ஸ், பிரான்சில் இருந்து இத்தாலி என சுலபமாக சென்று வரலாம். இங்கிலாந்தில் தயாரிக்கப்படும் வேக்ஸேவ்ரியா, […]

செய்திகள்

‘கோவிஷீல்டு’ போட்டோருக்கு 7 ஐரோப்பிய நாடுகள் அனுமதி

லண்டன், ஜூலை 1– ஏழு ஐரோப்பிய நாடுகளிலும் சுவிட்சர்லாந்திலும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக்கொண்ட இந்தியப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இந்திய அரசினால் வழங்கப்பட்ட தடுப்பூசி சான்றிதழ்களை அங்கீகரித்து தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளிடம் இந்திய அரசு வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில், ஐரோப்பிய நாடுகளான ஆஸ்திரியா, ஜெர்மனி, ஸ்லோவேனியா, கிரீஸ், ஐஸ்லாந்து, அயர்லாந்து மற்றும் ஸ்பெயின் ஆகிய ஏழு ஐரோப்பிய நாடுகள், கோவிஷீல்டு […]