செய்திகள்

சென்னை வந்தடைந்தது 75,000 கோவாக்சின் தடுப்பூசிகள்

சென்னை, மே 4– ஐதராபாத்திலிருந்து 75,000 கோவாக்சின் கொரோனா தடுப்பூசிகள் இன்று சென்னை வந்தடைந்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது. தொற்றைக் கட்டுப்படுத்த, பாரத் பயோடெக் நிறுவனத்தின் ‘கோவாக்சின்’ மற்றும் சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசிகள் பொது மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. தற்போது கொரோனா வேகமாக பரவி வருவதால் தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இந்நிலையில், ஐதராபாத்திலிருந்து 75 ஆயிரம் கோவாக்சின் கொரோனா தடுப்பூசி இன்று சென்னை வந்தடைந்துள்ளது. […]

செய்திகள்

தடுப்பூசியால் இதுவரை உயிரிழப்பு ஏதும் இல்லை: மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்

டெல்லி, பிப். 16– கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதால் யாரும் உயிரிழக்கவில்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி இந்தியாவில் கண்டறியப்பட்டு, கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் ஆகிய தடுப்பூசிகளுக்கு அவசரகால அனுமதி கொடுக்கப்பட்டுள்ள நிலையில், முதல்கட்டமாக முன்களப்பணியாளர்கள் தடுப்பூசியை போட்டு கொண்டிருக்கின்றார்கள். உயிரிழப்பு இல்லை நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் உள்ள முன்கள பணியாளர்கள் இந்த தடுப்பூசியை எடுத்து கொண்டுள்ள நிலையில், கொரோனா தடுப்பூசி குறித்து சில வதந்திகளும் பரப்பப்பட்டு […]

செய்திகள்

‘கோவாக்சின்’ முதன்மையான தடுப்பூசி இல்லை: எய்ம்ஸ் இயக்குனர் விளக்கம்

புதுடெல்லி, ஜன. 4– கோவாக்சின் தடுப்பூசி அவசர கால பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதற்கு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், அது முதன்மையான தடுப்பூசியாக பயன்படுத்தப்படாது என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது, புனேவைச் சேர்ந்த சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு மற்றும் ஐதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியின் அவசரக்கால பயன்பாட்டிற்கு நேற்று மத்திய அரசு அனுமதியளித்து. இதைத்தொடர்ந்து இன்னும் சில நாட்களில் தடுப்பூசி வழங்கும் பணிகள் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பு மருந்தை […]

செய்திகள்

கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளுக்கு அனுமதி: பிரதமர் மோடி வாழ்த்து

கொரோனாவைத் தடுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளுக்கு அனுமதி: பிரதமர் மோடி வாழ்த்து மக்களுக்கு போடும் பணி விரைவில் துவங்கும் புதுடெல்லி, ஜன.3 கொரோனாவுக்கு எதிராக உருவாக்கப்பட்ட ‘கோவாக்சின், கோவிஷீல்டு’ தடுப்பூசிகளை அவசர கால பயன்பாட்டிற்கு பயன்படுத்த, இந்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனை பிரதமர் மோடி வரவேற்றுள்ளார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசியை தயாரிக்கும் ஒப்பந்தத்தை மஹாராஷ்டிரா மாநிலம் புனேயை சேர்ந்த சீரம் நிறுவனம் பெற்றுள்ளது. தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை […]