சென்னை, டிச.21– கோயம்பேடு பகுதியில் போக்குவரத்து காவலரை தாக்கிய ஆட்டோ ஓட்டுனர் கைது செய்யப்பட்டார். கோயம்பேடு போக்குவரத்து காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வரும் ராபர்ட் அந்தோணி செபஸ்டின், (வயது 42) நேற்று முன்தினம் சின்மயா நகர் பகுதியில் பணியில் இருந்தபோது, அங்கு அதிவேகமாகவும், விபத்தை ஏற்படுத்தும் நோக்கில் வந்த ஒரு ஆட்டோவை நிறுத்த முயன்றபோது, அந்த ஆட்டோ, இவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது. தலைமைக்காவலர் இந்த ஆட்டோவை விரட்டிச் சென்று, ஆட்டோ ஓட்டுனரை […]