ராமேசுவரம், ஆக.5- பாம்பன் கடலில் புதிதாக அமைக்கப்பட்டு உள்ள ரெயில் தூக்குப்பாலம் வழியாக ரெயில் என்ஜின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்தது. பாம்பன் கடலில் ரூ.545 கோடி நிதியில் புதிய ரெயில் பாலம் கட்டும் பணி, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த ரெயில் பாலத்துக்காக பாம்பன் கடலில் 333 தூண்கள் அமைக்கப்பட்டன. அதன் மீது இரும்பு கர்டர்கள் பொருத்தும் பணிகள் முழுமையாக முடிந்துவிட்டன. அதே போல பாலத்தின் மையப்பகுதியில் 77 […]