சிறுகதை

புது உத்தி – ராஜா செல்லமுத்து

கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள பிளாட்பார்மில் ஒரு நாட்டு மருந்து கடை இயங்கிக் கொண்டிருந்தது. அங்கு மூலிகைப் பொருட்கள், நாட்டு மருந்துப் பொருட்கள் என்று அதிக விற்பனை செய்து கொண்டிருந்தார்கள். அந்தக் கடை பார்ப்பதற்கே இயற்கைச் சூழலில் அழகாக இருந்தது. பிளாட்பார்மில் நடப்பவர்கள் கூட அந்தக் கடைக்குள் ஒரு எட்டு போய் பார்த்துவிட்டு வரலாம் என்ற ஆவலைத் தூண்டும் அளவிற்கு அங்கே இருக்கும் பொருட்களை அழகாக அடுக்கி வைத்திருந்தார்கள். எல்லாம் இயற்கை சார்ந்த பொருட்கள். உடலுக்கும் மனதுக்கும் நெருக்கமானவைகள். […]